Tuesday 13 July 2010

இனி இரவிலும் சமையல் சிலிண்டர் சப்ளை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 கூடுதல் 
ரூ.25 வசூலிப்புடன் இனி இரவிலும் சமையல் சிலிண்டர் சப்ளை
  ஜுலை.13  மத்திய அரசு, அலுவலகம் செல்வோர் வசதிக்காக மாலை 6
மணிக்கு பின்பும், இரவு 8 மணிவரை வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் (ஜுலை.13) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு விநியோகத்தை எளிமைப்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் சிலிண்டர்களை விற்பனை செய்யும் வசதி இன்று முதல் (ஜுலை.13) அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையிசுல்,

தற்போது வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அலுவலகம் செல்வோரின் வசதிக்காக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இதை வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ. 25 வசூலிக்கப்படும்.

அதே போல இனிமேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சிலிண்டரை வினியோகம் செய்யாவிட்டால் கட்டணத்தில ரூ. 20 குறைத்துக் கொள்ளப்படும்.

முதலில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய்நிறுவனங்கள் இந்த புதிய வாடிக்கையாளர் எளிமை வினியோக திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தும்.

0 comments: