Thursday 1 July 2010

தமிழ் செம்மொழி மாநாட்டால் திருப்பதியில் அமோக வசூல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் செம்மொழி மாநாட்டையொட்டி 3 நாட்கள் பள்ளி-அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் திருப்பதியில் குவிந்தனர். அந்த 4 நாளில் திருப்பதி உண்டியலுக்கு ரூ.20 கோடி வசூல் சேர்ந்துள்ளது. இதனால் திருப்பதி கோவிலில் கூட்டம் அலை மோதியது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலுக்கு வழக்கத்தை விட கூடுதல் வருமானம் கிடைத்தது. கடந்த 24-ந் தேதி கோவிலுக்கு ரூ. 1.66 கோடி வருமானம் கிடைத் தது. 25-ந்தேதி ரூ. 1.87 கோடி, 26-ந்தேதி ரூ. 1.68 கோடி, நேற்று ரூ. 2.07 கோடியும் உண்டியல் மூலம் வசூலானது.

இதே போல் கடந்த 4 நாட்களாக ரூ. 300 விரைவு தரிசன கட்டணம் மூலம் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். இதன் மூலம் ரூ. 12 கோடி வருமானம் கிடைத்தது. இது தவிர லட்டு பிரசாத விற்பனை மூலமும் கூடுதல் வருமானம் கிடைத்தது.

திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த 4 நாட்களாக தமிழக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் மூலம் கோவிலுக்கு ரூ. 20 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

திருப்பதியில் இன்று காலை தமிழகம் வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 6.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட கருடாத்ரி ரெயிலில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்தது. இதையடுத்து 10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட சப்தகிரி ரெயிலிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

பஸ்-ரெயில்களில் இடம் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் மதியம் வரை திருப்பதி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

0 comments: