Wednesday 9 June 2010

ராமதாஸ் திணறல் வேட்டி கட்சியா? சேலை கட்சியா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து பா.ம.க.செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.கூட்டணியில் மீண்டும் பா.ம.க.வைச் சேர்க்கத் தயார். ஆனால், ராஜ்யசபா சீட்டை இப்போது தர முடியாது. 2013 தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என தி.மு.க. கூறியுள்ளது. இந்த நிபந்தனையால் பா.ம.க. பெரும் குழப்பமடைந்துள்ளது.

தி.மு.க.வின் அழைப்புக்கு என்ன பதில் கொடுப்பது என்பது தெரியாமல் அது விழித்துக் கொண்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. ஒரு சீட் தரும், அதை வைத்து அன்புமணியை நிறுத்தி மத்தியில் அமைச்சராக்கி இழந்த செல்வாக்கை மீட்டுவிடலாம் என அது கருதியது. ஆனால், அதில் தி.மு.க. மண்ணைப் போட்டுவிட்டது.

தி.மு.க.வின் கிடுக்கிப் பிடியில் சிக்கியுள்ள டாக்டர் ராமதாஸ், வேட்டி கிழியாமல் இதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்ற பெரும் யோசனையில் மூழ்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். ஆனால், தி.மு.க.வின் முடிவு தீர்மானமானது என்று கருணாநிதி கூறிவிட்டார். அதன் பின்னர் கட்சியின் முடிவை டாக்டர் ராமதாஸ் ஆலோசனை செய்து அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறியிருந்தார். இருப்பினும் தொடர்ந்து ராமதாஸ் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறாரே தவிர இதுவரை முடிவை அவர் அறிவிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பா.ம.க. நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் ராமதாஸ். இதில், பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் இரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் வெளியில் வந்த ராமதாஸிடம் என்ன முடிவெடுத்துள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சென்னையில் செவ்வாய்க்கிழமை பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டம் முடிந்த பின்பு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.சென்னை ஸ்டார் சிட்டி ஹோட்டலில் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படுகிறது.

கிழிய போவது வேட்டியா சேலையா பின்னோட்டத்தில் சொல்லுங்களேன்

1 comments:

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்