Tuesday 22 June 2010

2 லட்சம் ஆட்டோ- டாக்சி ஓடவில்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பையில் ஆட்டோ, டாக்சிகளுக்கு மீட்டர் முறை அமலில் உள்ளது. இதற்கான கட்டண விகிதத்தை அதிகமாக்க கோரி இன்று ஆட்டோ- டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 லட்சம் ஆட்டோ- டாக்சிகள் ஓடவில்லை.
 
மும்பையில் பெரும்பாலான ஆட்டோ, டாக்சிகள் எரிவாயு மூலம் இயங்குகின்றன. சமீபத்தில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. இதனால் அவர்கள் கட்டணத்தை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்தனர்.
 
மும்பையில் ஆட்டோ குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாயாக உள்ளது. இதை ரூ. 15 ஆக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 8 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். டாக்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ. 14 ஆக உள்ளது. இதை ரூ. 16 ஆக உயர்த்த கேட்டுள்ளனர்.

0 comments: