Sunday 27 June 2010

1000 கோடி சூதாட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் போது இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆட்டத்தின் போது ரூ.1000ம் கோடிக்கும்  சூதாட்டம் நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
கிரிக்கெட் போட்டிகளை விட கால்பந்து போட்டிகளுக்கு 20 மடங்கு அதிகமான தொகைக்கு சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிகள் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளன. தொலைக்காட்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் இதனை பார்த்து வருகின்றனர். இதனிடையே கால்பந்து போட்டிகள் தொடர்பான சூதாட்டமும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. எந்த அணி வெற்றி பெறும் என்று யூகத்தின் அடிப்படையில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்தும் கால்பந்து தொடர்பான சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு ஆட்டத்தின்போது
ரூ.1000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெறுவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கிரிக்கெட் போட்டிகளை விட 20 மடங்கு அதிக தொகை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் புழங்குவதாக கூறப்படுகிறது.

இந்திய சூதாட்ட தரகர்கள் சர்வதேச கிரெடிட் கார்டு மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளின்போது ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்பதால் சூதாட்டத் தொகை குறைவாக இருப்பதாகவும் கால்பந்துக்கு உலகளாவிய சந்தை இருப்பதால் ஆயிரக்கணக்கான கோடி இதில் புழங்குவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரேசில் மற்றும் அர்ஜென்டினா மீது சூதாட்ட தரகர்கள் அதிக தொகையை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

0 comments: