Wednesday 12 May 2010

குஷ்பு மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சட்டமன்ற மேலவை அமைகிறது. மொத்தம் 78 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அவையில் நடிகை குஷ்பு, திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து இருவரும் இடம் பெறுவர் என்று பேச்சு அடிபடுகிறது. சட்டமன்ற மேலவையை ஏற்படுத்த வகை செய்யும் மசோதாவை இந்தியாவின் நாடாளுமன்றம் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றியது.

அதையடுத்து மேலவையை ஏற்படுத்த பரபரப்பாகப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பர் என்று தெரிகிறது. தமிழ்நாட்டின் மேலவை 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் வருகிற வரையில் இந்த அவை ஒன்றுதான் இந்தியாவிலேயே நடந்துவந்தது. அந்த அவை, எம்ஜிஆர்-கருணாநிதி போட்டி அரசியல் காரணமாக 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியின்போது கலைக்கப்ப்டடது.

மேலவையின் இறுதிக் கூட்டம் 1986 மே மாதம் 13-ந் தேதி நடந்தது. தனது அரசியல் வைரி எம்ஜிஆர் அகற்றிய அந்த அவையை மறுபடியும் ஏற்படுத்த திமுக தலைவர் திரு கருணாநிதி இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டார்.

கடைசியாக இப்போது வெற்றி பெற்றுத் தான் முன்னின்று கட்டிய புதிய சட்டமன்றக் கட்டடத்தில்அந்த அவையை ஏற்படுத்துகிறார் திரு கருணாநிதி. மேலவை உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப் படுபவர்கள் அல்லர். நியமிக்கப் படுவார்கள். நடிகை குஷ்பு, திருமணத்துக்கு முன் உடலுறவு, சேர்ந்து வாழ்வது போன்ற புரட்சிகரமான கருத்துகளைத் தெரிவித்து வம்பில் மாட்டிக் கொண்டவர். என்றாலும் அண்மையில் நாட்டின் உச்ச நீதிமன்ம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்தது. அதையடுத்து தான் அரசியலுக்கு வரப்போவதாக குஷ்பு அறிவித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்குத் தொண்டாற்றப் போவதாகத் தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று தெரிகிறது. அவர் ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டின் இளையர்,கல்லூரி மாணவர்கள் எல்லாரும் தமிழ்ப் புக்கதத்தை கையில் எடுக்க ஊக்குவிப்பாக இருந்த பாடல் ஆசிரியர், எழுத்தாளர் வைரமுத்து மேலவைக்கு தேர்வு பெறுபார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே முதல்வரின் இதயத்தில் இடம்பெற்று இருக்கும் மற்றொரு திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வாலி, தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமனம் பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலவையில் போலிஸ் துறையை இரண்டு போலிஸ் அதிகாரிகள் பிரதிநிதிப்பார்கள் என்றும் தெரிகிறது. தமிழ்நாட்டில் மேலவை அமையும் நேரம், திமுகவுக்கும் முதல்வர் திரு கருணாநிதிக்கும் திமுக காங்கிரஸ் உறவுக்கும் மிகவும் உகந்த நேரம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். “தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. அந்தத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் பாமகவையும் சேர்த்துக்கொள்ள மேலவை உதவும். “அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக முழு பலத்துடன் வெற்றி பெறும் வகையில், தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது, மேலவை ஏற்பாட்டைத் திமுகவுக்குச் சாதமானதாக திரு கருணாநிதி பயன்படுத்திக் கொள்வார்,” என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

0 comments: