Tuesday 11 May 2010

அனுமதியோடு போன அழகிரி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய அரசில் உரத் துறை அமைச்சராக இருக்கும் திமுக பெரும் புள்ளி முக அழகிரி, நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வராமல் அடிக்கடி மட்டம் போடுகிறார் என்று அண்மையில் மன்றத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. நடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் இடைவிடாது அழகிரி பிரச்சினையைக் கிளப்பியதை அடுத்து அரசாங்கம் தடுமாறிப்போனது. என்றாலும் இப்போது அழகிரிக்கு ஆதரவாக பிரதமர் அலுவகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடந்த போது ஏப்ரல் 17 ம்தேதி முதல் 10 நாட்களுக்கு அழகிரி மாலத்தீவுக்குச் சென்றார். அதற்கு முன்னதாக அவர் ஏப்ரல் 12ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த பொது நல மனுதாரர் சுபாஷ் அகர்வால் அழகிரி பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் இந்த விவரங்களைத் தெரிவித்தது. நாடாளுன்றக் கூட்டம் நடக்கையில் அமைச்சர்கள் யாரும் பிரதமர் அலுவலக அனுமதியோடுதான் எங்கும் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கியது. அமைச்சர் அழகிரி, மத்திய அரசியலில் நாட்டம் இன்றி இருப்பதாகவும் அதனால் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அழகிரி மன்றத்தில் தமிழில் பேச விரும்புவதாகவும் ஆனால் அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர இதர மொழிகளில் பேச அனுமதி இல்லை என்றும் அதனாலேயே அவர் நாடாளுமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருக்கிறது. தமிழக முதல்வர் மு கரு£ணாநிதி, அண்மையில் புதுடெல்லி சென்றருந்தபோது, அழகிரி நாடாளுமன்றத்துக்குச் செல்லலாதது பற்றி அவரிடமே கேளுங்கள் என்று செய்தியாளர் களிடம் பேசியபோது சொன்னார். திரு கருணாநிதியின் தலைநகர் பயணத்தைத் தொடர்ந்து, தமிழக மேலவையை மத்திய அரசு அனுமதித்தது உள்ளிட்ட பலவும் அதிவேகமாக நடந்து வருகின்றன. அவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இன்னும் நெருக்கமாகி வருவதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் முரண்டு பிடிக்கத் தொடங்கிவிட்ட வேளையில், அடுத்தபடியாக அதிக இடங்களைக் கொண்டுள்ள திமுகவை இறுக்கமாகப் படித்துக்கொள்ள காங்கிரஸ் முயல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்,. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திமுகவும் காங்கிரஸ் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது

1 comments:

Anonymous said...

வாசகர்களே,
என்னையும் கொஞ்சம் Follow செய்யுங்களேன்.
www.dailypcnews.blogspot.com