இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
எனது தந்தை முதல்வர் கருணாநிதி விரும்பினால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
சென்னையில் நடந்த காதலாகி என்ற படத்தின் ஆடியோ வெளீட்டு விழாவில் கலந்து கொண்டார் மு.க.அழகிரி. அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்களது தங்கை கனிமொழிக்காக மத்திய அமைச்சர் பதவியை தியாகம் செய்ய நீங்கள் தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனவே என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அழகிரி,
கலைஞர் அப்படி விரும்பினால், நான் அமைச்சர் பதவியை கைவிட வேண்டும் என்று விரும்பினால், உடனே நான் அதைச் செய்வேன். ஆனால் கனிமொழிக்காக நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று யார் சொன்னது? என்றார் அழகிரி.
சோனியா காந்தியை சந்திக்க முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளாராமே என்ற கேள்விக்கு, அந்தக் கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றார்.
முன்னதாக நடந்த ஜேக் கம்யூனிகேஷன்ஸ் எம்.எஸ்.ஓ தொடக்க விழாவில் கலந்து கொண்ட அழகிரி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை டெல்லி செல்கிறேன் என்றார்
Thursday, 15 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment