Wednesday, 14 April 2010

பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ஆலிம் முகமது சாலேஹ் பொறியியல் கல்லூரி 6&வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் பொறியியல் படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்று தெரிவித்துள்ளார். விழாவுக்கு, கல்லூரி நிறுவன தலைவர் எஸ்.எம்.ஷேக் நூருதீன் தலைமை வகித்தார். துணை தலைவர் அபி புன்னிசா சாகிபா, செயலாளர் ஷேக் பாத்திமா ஹபிசா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.முரளி கிருஷ்ணா வரவேற்றார். விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பி.மன்னர் ஜவகர், 225 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 13 மாணவர்களுக்கு தங்க நாணயங்களையும் வழங்கினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தாண்டு 82 ஆயிரம் பேர் பட்டம் பெற்று வெளியில் வந்துள்ளனர். கடந்தாண்டு 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்தாண்டு மேலும் 94 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டுள்ளனர். இதன் மூலம் மேலும் 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக உருவாகும். பொறியியல் படிப்பவர்களில் 86 சதவீதம் பேர், கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவது கடினம். இதனால் கிடைக்கும் வேலையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பொறியியல் படித்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். 4 ஆண்டுகள் கடினமாக படித்து வெற்றி பெற்றால், 40 வருட வாழ்க்கை உங்களுக்கு நன்றாக இருக்கும். சரியாக படிக்காவிட்டால் 40 ஆண்டு வாழ்க்கை கஷ்டமாக இருக்கும். அதனால் நன்றாக படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். பின்னால் வரும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆலிம் முகமது சாலேஹ் போன்ற தரமான கல்லூரிகளில் அனைத்து இடங்களும் பூர்த்தியாகிவிடும்.

0 comments: