Tuesday, 23 March 2010

'கூகுள்' இணைய தேடு தளத்தில் மாடு என டைப் செய்தால் நமீதா படம் வருகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இணையத்தில் மிகப் பெரிய தேடு தளமாக விளங்குவது கூகுள் என்பது கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று. ஏதாவது ஒரு செய்தி குறித்து தகவல் அறிய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட தலைப்பை தட்டினால் போதும் அடுத்த வினாடி விபரங்கள் கொட்டி விடும். பிரபலமான நபரின் படம் வேண்டுமா... கவலையே படத்தேவை இல்லை. அவரின் பெயரை டைப் செய்து எண்டர் தட்டினால் வரிசையாக விதவிதமான தோற்றத்தில் படங்கள் அணிவகுத்து நிற்கும். காக்கையும் குருவியிம் எங்கள் ஜாதி என்று பாரதி பாடிச் சென்றார். தமிழர்கள் ஆடு மாடுகளையும் தங்களில் ஒருவராக எண்ணும் பெருந்தன்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இந்த உண்மை கூகுள் இணைய தேடு தளத்துக்கு புரிந்தததோ என்னவோ " மாடு " என தமிழில் டைப் செய்து எண்டரைத் தட்டினால் பிரபலமான ஒரு நபரின் படம் தோன்றுகிறது. இது எப்படி என்பது வியப்பாக இருக்கிறது. அந்த பிரபலமான நபர் யார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா.... கூகுளில் மாடு என தமிழில் டைப் செய்து எண்டரைத் தட்டுங்கள். அடுத்த வினாடி நமீதாவின் படம் பளிச்சிடும். அதன் பின்னர்தான் மாடுகளின் படம் இருக்கும். கூகுள் இணைய தேடு தளத்தின் இந்த செயல்பாடு நமீதாவை பெருமைப்படுத்தவா.... அல்லது சிறுமைப்படுத்தவா... என்பது குழப்பமாக இருக்கிறது.

2 comments:

said...

ஆமா! சரியாக தான் "நமீதாவை தேர்ந்து" எடுத்து உள்ளது - Google!!
நம் (தமிழன்) அறிவில் எட்டாமல் போனதை GOOGLE சொல்லியாவது தமிழன் தெரிந்து கொள்ளட்டுமே.

Anonymous said...

It is not google's game....

It is ram malar's game...

Visit following website to know the reason


http://rammalar.wordpress.com/2009/05/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8F/