Monday, 8 March 2010

பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் வெற்றிச் சின்னம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிங்கள ராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத் தீவு மாவட்டம் நந்திக் கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. இந் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச் சின்னம் அமைத்து வருகிறது.

0 comments: