Monday, 8 March 2010

ஆஸ்கார் விருது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது தி ஹர்ட் லாக்கர் படத்துக்கு கிடைத்தது. ஈராக் போரை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கேதரீன் பிகேலோ சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த படத்துக்கு சிறந்த மூல திரைக்கதை, சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த எடிட்டிங் ஆகிய விருதுகளும் கிடைத்தன. தி ஹர்ட் லாக்கர் படம் மொத்தம் 6 விருதுகளை தட்டி சென்றது. 9 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்துக்கு 3 விருதுகள் மட்டுமே கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த விஷ§வல் எபெக்ட் ஆகியவற்றில் இந்த விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகராக “கிரேசி ஹார்ட்” படத்தில் நடித்த ஜெப்பிரீட்ஜஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக “தி பிளைண்ட் சைடு” படத்தில் நடித்த சான்ட்ரா புல்லாக் தேர்வு செய்யப்பட்டார். விருது பெற்றவர்கள் விவரம்: - சிறந்த படம்:- தி ஹர்ட் லாக்கர். சிறந்த டைரக்டர்:- கேதரீன் பிகேலோ (தி ஹர்ட் லாக்கர்) சிறந்த நடிகர்:- ஜெப் பிரீட்ஜஸ் (படம்: கிரேசி ஹார்ட்). சிறந்த நடிகை:- சான்ட்ரா புல்லாக். (படம்: தி பிளைண்ட் சைடு) சிறந்த துணை நடிகர்:- கிறிஸ்டோப் வால்ட்ஸ் (படம்: இன்குளோரியஸ் பெஸ்டர்ட்ஸ்) சிறந்த துணை நடிகை:- மோனிக் (படம்: பிரீசியஸ்) சிறந்த துணை நடிகை:- மோனிக் (படம்: பிரீசியஸ்) சிறந்த வெளிநாட்டு மொழிபடம்: தி சிகரெட் ஆப் தியர்ஐஸ் (அர்ஜென் டினா நாட்டு படம்). சிறந்த மூல திரைக்கதை:- மார்க்போல் (படம்: தி ஹர்ட் லாக்கர்). சிறந்த திரைக்கதை: ஜியோப்பிரி பிளட்கர் (பிரீசியஸ்). சிறந்த அனிமேஷன் படம்: “அப்”. சிறந்த கலை இயக்கம்:- அவதார். சிறந்த ஒலிப்பதிவு: அவதார். சிறந்த சவுண்ட் மிக்சிங்:- தி ஹர்ட் லாக்கர். சிறந்த சவுண்ட் எடிட்டிங்:- தி ஹர்ட் லாக்கர். சிறந்த பாடல்:- தி லேரி ஹைண்ட் (படம்: கிரேசி ஹார்ட்). ரெய்ன் பிங்காம், போன்பர்னட். சிறந்த இசை:- படம்: அப் (மைக்கேல் சியாச்சிலோ) சிறந்த உடை அலங்காரம்: தியங் விக்டோரியா. சிறந்த டாக்குமெண்டரி படம்:- “தி கோவ்”. சிறந்த எடிட்டிங்:- தி ஹர்ட் லாக்கர். சிறந்த மேக்-அப்:- ஸ்டார் டிரக். சிறந்த அனிமேஷன் குறும்படம்:- லோகரமா. சிறந்த ஆக்ஷன் குறும் படம்:- தி நியூ டேனன்ட்ஸ். சிறந்த விஷ§வல் எபெக்ட்:- அவதார்.

0 comments: