இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.நடிகை ரஞ்சிதாவுக்கும் சாமியாருக்கும் உள்ள உறவு என்ன? படுக்கை அறை காட்சிகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கு வக்கீல் ஸ்ரீதர் மூலம் நித்யானந்தா அளித்துள்ள பதில் வருமாறு:-
எல்லோரையும் போல் ரஞ்சிதாவும் ஒரு பக்தை அவ்வளவுதான். என் மனமறிந்து சொல்கிறேன். யாரையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. உடலில் ஒளிந்து இருக்கும் சக்தியை ஒரு முகப்படுத்தி அறிவது தான் ஹீலிங் பயிற்சி. இதை கற்றவர்கள் யாரையும் தொடுவது தவறு இல்லை. இப்போது வெளியிட்டுள்ள படங்களை நான் பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை
‘ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
போலீஸ் மற்றும் மீடியா அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனது தீவிர சீடரும், ஃப்ரீலான்ஸ் எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர் மூலம் தனது இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மற்றொரு பாகம் வெளியானது. இது நித்யானந்தா வெளியிட்டுள்ள மூன்றாவது வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலும் கூட ரஞ்சிதா பற்றி நேரடியாக எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை ராஜீவ். பட்டும் படமாலும் பூசி மெழுகி அவர் கேள்வி கேட்க, இவரும் அதற்கு ரொம்ப டிப்ளமாடிக்காக பதில் சொல்லியுள்ளார்.
ரஞ்சிதா உடனான வீடியோ குறித்து நித்தியானந்தா குறிப்பிடுகையில்,
‘பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.
அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?
இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
அதாவது ரஞ்சிதாவுடன் தான் படுக்கை அறையில் இருப்பதை நித்தியானந்தா இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது இல்லை அதிலிருப்பது நாங்கள் இருவர்தான். ஆனால் எல்லாமே ஆடையுடன் இருந்த நிலையில்தான் நடந்துள்ளன என்கிறார்.
இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பது:
‘ஆஸ்ரமம் ஆன்மிகப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்ததால் எங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பது குறித்து திட்டமிடவில்லை. அதோடு நாங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்றுவிக்கப்படவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் மிகவும் அமைதியான, சாந்தமான எளிமையானவர். எங்களுக்குள்ளாகவே பக்தர் என்ற போர்வையில் ஒரு எதிரி இருப்பார் என நினைக்கவில்லை.
மீடியாக்கள் எங்கள் தரப்பு வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம்சாட்டுபவர்கள் கூறும் புகார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.
என்னை விட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள்.
நாங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்துள்ளோம். அவற்றைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை. இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள்.
இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை. அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வராமல் இருக்க வேண்டியுள்ளது,” என்றார் நித்தியானந்தா.
இதற்கிடையே ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள நித்தியானந்தா,
‘ரஞ்சிதா என்னுடைய சிஷ்யை. இதற்கு முன்பும், இப்போதும், எப்போதும் அவர் என்னுடைய சிஷ்யையாகவே இருப்பார்.
நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு பக்தை என்ற முறையில் ரஞ்சிதா எனக்கு பணிவிடை செய்தார். அதில் என்ன தவறு இருக்கிறது?
எந்த ஒரு மனிதருக்கும் உதவி செய்ய ஒருவர் தேவை தானே, ஒரு பக்தை தாமாக முன்வந்து பணிவிடை செய்வதை நான் மறுக்க முடியாது. அதை ஏற்பதும் தவறல்ல.
மற்றபடி, சட்டவிரோதமாக நானும் ரஞ்சிதாவும் எதையும் செய்யவில்லை.
இவையெல்லாம் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட ஒரு சதி தானே தவிர வேறில்லை.
ரஞ்சிதா நானும் இருப்பது நிஜம் தான் நித்தியானந்தா விளக்கம்
Saturday, 13 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Can't accepct this staemnt !
அதான் தெளிவா சொல்லிட்டாரெ சட்டத்துக்கு புறம்பா எதுவும் செய்யவில்லை என்று. யாரையும் நிர்பத்திக்காமல் தான் ஹீலிங் தெரபி கொடுத்தார் என்ரு. இவரிடம் ஹீலிங் தெரபி வாங்கிய நடிகைகளின் லிஸ்ட் ஒன்று ஜூவியில் வெளிவந்திருக்கிறது. ஆமாம் டிரஸோட படம் போட்டதால் ஒண்ணும் இல்லங்கிறார். அதுவும் போட்டு மானத்தை வாங்கினால் தான் மற்றதயும் ஒத்துக்கொள்வார்.
ஸ்டேட்மெண்ட் ஒண்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. ஒண்ணு சாமி உங்களுக்காகவே ஒரு பாட்டு சமர்ப்பணம் செய்கிறேன்.
”என்ன என்ன கனவு கண்டாயோ சாமி”
வாழ்க்கை ஒரு கனவு தானய்யா சாமி
ஒன்றை உந்தன் மனம் கேட்டது அந்த
ஒன்றும் வேறு இடம் போனது.
ஒண்ணும் கவலைப்படாதீங்க நம் மக்களுக்கு மறதி என்கிற தேசிய வியாதி இருக்கு அதனால் மக்கள் மறுபடியும் உங்கள தேடி வருவாங்க. ஆனால் முன்ன மாதிரி அநியாயமா ஃபீஸ் வாங்காதீங்க. கால்ல விழுவதற்கு 2500 வாங்குறீங்க அப்புரம் உங்க மடத்தில் எல்லோரும் சமம்னு வேற வெளியில பீத்திக்கிறீங்க.
ஒண்ணும் கவலைப்படாதீங்க நம் மக்களுக்கு மறதி என்கிற தேசிய வியாதி இருக்கு அதனால் மக்கள் மறுபடியும் உங்கள தேடி வருவாங்க.//
இதுதான் உண்மை
தேசியமே ஒரு மக்கள் வியாதி தான்! :-p
ஹீலிங் மெத்தட்டில் வாய்வழிப் புணர்ச்சிங்கற ஒரு வகை இருக்கு போல! நல்ல ஹீலிங்டா சாமி!! ட்ரெஸ் போட்டுத் தப்பு பண்ணா, தப்பில்ல. ட்ரெஸ் போடாம பண்ணாத் தான் தப்பு! சூப்பர்!
// ட்ரெஸ் போட்டுத் தப்பு பண்ணா, தப்பில்ல. ட்ரெஸ் போடாம பண்ணாத் தான் தப்பு! சூப்பர்!//
சூப்பர்!
Post a Comment