Friday, 12 March 2010

நித்தியானந்தா சாமிகளின் நிர்வாண சி.டி, பரபரப்பு இனையதளத்தில் விற்று காசு பார்த்த பிரபல புள்ளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்கள் 2 நாட்களுக்கு முன்பு வெளியாயின. இந்த காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாக நித்யானந்தாவின் பிரதான சீடரும் சேலம் மாஜி தொழிலதிபருமான லெனின் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்நிலையில், ஆசிரம அறையில் நித்யானந்தா நிர்வாணமாக இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
படுக்கையில் இருந்து நித்யானந்தா எழுந்து செல்கிறார். பின்னர், குளித்துவிட்டு நிர்வாணமாக வருகிறார். துவட்டியபடியே கையில் துண்டை எடுத்து வருகிறார். சிறிது நேரத்தில் காவி உடைகளை மாற்றிக்கொண்டு அறையில் இருந்து புறப்படுகிறார்.
தொலைதூரத்தில் உள்ளதையும் தெளிவாக காட்டும் கேமரா இதில் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. பூந்தொட்டி போன்ற எதிலோ அது மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கேமரா இருக்கும் இடத்தை நோக்கி நித்யானந்தா கையை ஆட்டுகிறார். ஆனால், அங்கு கேமரா வைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஒரே இடத்தில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. நித்யானந்தாவின் ஆபாச காட்சிகள், படங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திக் கும்பலுடன் இணைந்து செயல்பட்ட லெனின் ஆபாச வீடியோ சி.டி.யுடன் சென்னையில் ஒரு முக்கிய புள்ளி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் சி.டி.யை யாரிடம் கொடுப்பது? எப்படி வெளியிடுவது? என்று திட்டம் தீட்டப்பட்டது. சி.டி. கையில் கிடைத்ததும் அந்த முக்கிய புள்ளி அதை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் வகுத்தார். இதை வெளிப்படுத்த முதலில் ஒரு பத்திரிக்கைக்கும், ஒரு டி.வி. சேனலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நாளில் அதை இண்டர்நெட்டிலும் வேகமாக பரவ விட்டார். அதை “டவுன் லோடு” செய்ய ரூ.500 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மேலும் பல செக்ஸ் சேனல்களுக்கும் அனுப்பி பணத்தை கறந்தார். இதன் மூலம் அவர் 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாக ரகசிய போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையே சாமியாருக்கு நடிகை மசாஜ் செய்வதாக ஒரு புதிய சி.டி.யை தயாரித்து அதையும் இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். இதற்கும் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் கண்டித்த பிறகும், அவர் ஆபாச சி.டி.யை வெளியிட்டு வருகிறார். இந்த சி.டி.யை பார்க்க செக்ஸ் மீது ஆர்வம் கொண்ட சில இளைஞர்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகிறார்கள். இதனால் வியாபாரம் படு ஜோராக நடக்கிறது. இண்டர்நெட்டில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுக்கவும், வழக்கு தொடரவும் சைபர் கிரைம் போலீசா ருக்கு அதிகாரம் உள்ளது. நித்யானந்தா என்ற போர்வையில் ஆபாச படங்களை இண்டர்நெட்டில் பரவவிட்டு கோடிக்கணக்கில் பணம் சுருட்ட திட்டமிட்டு செயல்படும் முக்கிய புள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் கருத்தாக உள்ளது. இளைஞர்களின் மனதை கெடுக்கும் இண்டர்நெட் வியாபாரம் தடுக்கப்பட வேண்டும். பர்மா பஜாரில் ஆபாச சி.டி. விற்றாலே தேடிச்சென்று போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் இண்டர்நெட்டில் சர்வ சாதாரணமாக செக்ஸ் சி.டி.யை விளம்பரப்படுத்தி அந்த புள்ளி வெளியிடுகிறார். ஆபாச படங்களை வெளியிடுவோரை பாரபட்சம் இல்லாமல் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

3 comments:

said...

more....................

said...

எதிர்மறையாக தோன்றினாலும் பலருடைய வாழ்க்கையை சீரழித்து வரும் போலி சாமியார்களின் பிடியில் சிக்கி அழியாமல் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்கிற நல்லெண்ணமும் இருக்கலாமல்லவா?

Anonymous said...

பெரியார்தாசன்
தாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?

கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!

ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?

நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்?

இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?

பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?

போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?
5:56 AM | Category: |