Sunday, 7 February 2010

மும்பையை விட்டு விரட்டிவிடுவார்களா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் கருத்து தெரிவித்து இருந்தார். இவரது இந்த கருத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தனது கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று ஷாருக்கான் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் அவரை நம்பிக்கை துரோகி என்று சிவசேனா விமர்சனம் செய்தது. இதற்கிடையே வெளி நாட்டு பயணத்தை முடித்து விட்டு ஷாருக்கான் மும்பை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சிவசேனாவின் மிரட்டல் காரணமாக எனது மனைவி, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் எனது வீட்டை சுற்றி தடுப்பு கட்டை அமைத்து போலீசார் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதை பார்த்து எனது மகள் வேதனை பட்டார். போனில் என்னிடம் கூறும் போது நம்மை மும்பையை விட்டு வெளியேறுமாறு சொல்லி விடுவார்களா என்று வேதனையுடன் கேட்டார். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பக்கத்து நாட்டுடன் (பாகிஸ்தான்) பேச்சு வார்த்தை மூலம் நல்ல உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். தேசத்துக்கு விரோதமான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. எங்கள் அணியில் ஒரு வீரர் இடம் பெற வேண்டும் என்று விரும்பினோம். அவர் ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்துல்ரசாக் பெயரை ஆலோசித்தோம். ஆனால் காயம் காரணமாக கடைசி நேரத்தில் அவர் ஏலப்பட்டியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். இதனால் பான்டை ஏலத்தில் எடுத்தோம். இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

0 comments: