Saturday, 13 February 2010

அதிர்ச்சியில் ஜெயலலிதா, கரையேறுமா அ.தி.மு.க ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இதனை தொடர்ந்து ஜெயங் கொண்டம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவியை பறித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த கே.ராஜேந்திரன் இன்று காலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து தன் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு கேட்டு மனு கொடுத்தார். அப்போது மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரும் உடன் இருந்தார்கள். அவர் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, அந்தக் கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து முடிவெடுப்பதாகக் கூறினார். பின்னர் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான கே.ராஜேந்திரன் பத்திரிகையாளர் களைச் சந்தித்தபோது பின் வருமாறு கூறினார். கே: நீங்கள் எம்எல்ஏ என்பதோடு அதிமுகவிலே என்ன பொறுப்பிலே இருக்கிறீர்கள்? ராஜேந்திரன்: ஜெயங்கொண்டம் ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளராக உள்ளேன். கே: நீங்கள் திடீரென்று இந்த முடிவெடுக்க என்ன காரணம்? ராஜேந்திரன்: என் தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான். முதலமைச் சரிடம் என் தொகுதிக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். குறிப்பாக ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டம் அமைப்பது குறித்துப் பேசினேன். நீலிதநல்லூர்-கொள்ளிடம் பாலம் கட்ட அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டேன். அணைக்கரை பாலம் பழுதுபட்டிருக்கிறது. அதனை விரைவில் முடித்துத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன். அரசினர் பாலிடெக்னிக், அரசு கலைக் கல்லூரி போன்றவைகள் வேண்டுமென்று 2006 ஆம் ஆண்டே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அவைகள் எல்லாம் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.திருச்சி-சிதம்பரம் சாலை அகலப்படுத்த வேண்டும் என்றும், அது தற்போது ஒரு வழிப்பாதையாக இருப்பதை இரண்டு வழிப்பாதை யாக மாற்றித் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தை பெரிய பேருந்து நிலையமாகக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டி ருக்கிறேன். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மத்திய அமைச்சர் ராஜா பல்வேறு நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக மருத்துவக் கல்லூரி பெற்றுத் தந்திருக்கிறார். பொறியியல் கல்லூரி பெற்றுத் தந்திருக்கிறார். ஆண்டிமடத்தில் ஐ.டி.ஐ. வருவதற்கு வழி வகுத்திருக்கிறார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10 கோடி ரூபாயில் கட்டிடம் கட்ட முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழிவகை செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயங் கொண்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதற்காக மத்திய அமைச்சர் ராஜா முயற்சி எடுத்து 20 கோடி ரூபாயில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றபோது கரும்பு டன் ஒன்றுக்கு 775 ரூபாய்தான் விலை நிர்ணயம் செய்தார்கள். ஆனால் தற்போது இந்த ஆட்சியில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு முதலமைச்சர் 1550 ரூபாய் என்று விலை உயர்த்தி அதுவும் மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை விட உயர்த்திக் கொடுக்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் மக்களுக்காக ஒரு நல்ல அரசு செய்யும் காரியங்களாக இருக்கின்றது. நான் இப்போது இங்கே வந்திருக்க முக்கிய காரணமே என்னுடைய தொகுதியில் பல மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான். மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். எனக்கு மனச்சாட்சி உறுத்துகின்றது. நான்காண்டுகள் முடிந்து விட்டன. பொம்மை சட்டமன்ற உறுப்பினராக நான் இருக்க விரும்பவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். இந்தக் கோரிக்கைகள் எல்லாம் முதலமைச்சரின் பார்வைக்குப் போனால் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் இங்கே வந்து மனு கொடுத்திருக்கிறேன்.இதனிடையே முதல்வருடன் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் சந்திப்பு நடைபெற்றதை அறிந்ததும் அவருடைய கட்சிப் பொறுப்பை ஜெயலலிதா பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2 comments:

said...

அதிர்ச்சியில் ஜெயலலிதா கரையேறுமா அ.தி.மு.க ?

என்று இருந்தால், தலைப்பு நன்றாக இருந்திருக்கும்.
-தோழன் மபா

said...

அதிரடி செய்தி
வருகைக்கு நன்றி, தாங்கள் சொன்னவாறு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது