Saturday, 13 February 2010

அதிரடியாக ஒடும் ஷாருப்கானின் மை நேம் இஸ் கான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐ.பி.எல். போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்களையும் சேர்க்க வேண்டும் என்று ஷாருக்கான் கருத்து தெரிவித்தார். ஷாருக்கானின் கருத்துக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கண்டனம் தெரிவித்தார். மேலும் ஷாருக்கான் நடித்த “மை நேம் இஸ் கான்” படத்தை மும்பையில் ஓடவிடாமல் தடுப்போம் என்றும் பால்தாக்கரே அறிவித்தார். இதையடுத்து படம் வெளியாகும் முன்பே தியேட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள். உடனே சிவசேனா தொண்டர்கள் முன்பதிவு செய்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தி சினிமா பட போஸ்டர்களை கிழித்து எரித்தனர். வன்முறையில் ஈடுபட்ட சிவ சேனா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். என்றாலும் பலத்த எதிர்ப்பையும் மீறி படம் நேற்று மும்பையில் ரிலீஸ் ஆனது. சிவசேனா எதிர்ப்பு காரணமாக சில தியேட்டர் அதிபர்கள் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கினார்கள். ஷாருக்கான் படத்தை ரிலீஸ் செய்யுங்கள். தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மராட்டிய முதல்- மந்திரி அசோக் சவான் அறிவித்தார். இதனால் பால்தாக்கரேயின் கோபம் மராட்டிய அரசு மீது பாய்ந்தது. ஷாருக்கான் படத்தை வெளியிடுவதில் அசோக் சவான் அதிக ஆர்வம் காட்டுகிறார். படத்தின் பெயர் அவர் மை நேம் இஸ் அசோக் கான் என்று கூட மாற்றலாம் என்றார். என்றாலும் திட்டமிட்டபடி நேற்று மும்பையில் “மை நேம் இஸ் கான்” படம் திரையிடப்பட்டது. படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காத வண்ணம் இருந்தது. சில தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ஆன் லைனிலும் ஏராளமானோர் புக் செய்து இருந்தனர். ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. தியேட்டர்கள் முன் திருவிழாக்கோலம் பூண்டதுபோல் இருந்தது. சிவசேனா தொண்டர்கள் வந்து ஷாருக்கான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தியேட்டர்கள் முன் போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மராட்டிய உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் பார்வையிட்டார். மும்பை ஐநாக்ஸ் தியேட்டரில் அவர் டிக்கெட் எடுத்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அந்தேரியில் உள்ள காம்ப்ளக்ஸ் தியேட்டரில் ஷாருக்கான் போஸ்டர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை. ஆனால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அங்கு சிறிது நேரத்தில் ரசிகர்கள் டிக்கெட் எடுத்து படம் பார்த்தனர். அவர்கள் கூறுகையில், இன்று ஷாருக்கான் படம் வெளியானது சந்தோஷமாக இருக்கிறது. எல்லா தியேட்டர்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்துள்ளனர். தியேட்டர் அதிபர்களும் படத்தை தயக்கம் காட்டாமல் ரிலீஸ் செய்துள்ளனர். செம்பூரில் உள்ள மல்டி பிளக்ஸ் காம்ப்ளக்சில் சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள். அங்கு போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதே போல் அந்தேரி ரூபம் தியேட்டர், பிரிமியர் சினிமா, கலா சவ்கி ஆகிய தியேட்டர்கள் முன்பும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதே போல் குஜராத் உள்பட மற்ற மாநிலங்களிலும் ஷாருக்கான் படம் எதிர் பார்த்தை விட அதிக வரவேற்பை பெற்றுள் ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் சிறிது நேரத்திலும் “ஹவுஸ்புல்” போர்டு மாட்டப்பட்டது. நடிகர் கமிர்பேடி, நடிகை பூஜா ஆகியோர் ஷாருக்கான் படம் பார்க்க வந்தனர். ஆனால் ஹவுஸ்புல் ஆன தால் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஷாருக்கானின் “மை நேம் இஸ் கான்” படம் திரையிடப்பட்டது. அங்கு முதல் நாளில் முதல் காட்சிக்கான டிக்கெட் ரூ. 60 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. உறை பனிக்குளிரில் ரசிகர்கள் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்றனர். இணைய தளத்தில் படத்தைக் காண ஏலத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஒரு டிக்கெட் ரூ. 60 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 2008-ல் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் பெர்லினில் திரையிடப்பட்டது. அந்த படத்தின் டிக்கெட் விற்பனை சாதனையை மை நேம் இஸ் கான் முறியடித்து விடும் என எதிர் பார்ப்பதாக சர்வதேச திரைப்பட விழா நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார். தனது படத்தை வெற்றி யடையச் செய்ததற்காக ரசிகர்களுக்கு நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நான் மன அழுத்தத்துடன் இருந்தேன். ஆனால் ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது என் மனது மகிழ்ச்சி அடைகிறது. இதற் காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்Ó என்று கூறியுள்ளார். இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசிக் கிறேன். அதேபோல் மும்பையையும் மும்பை மக்களையும் நேசிக்கிறேன். என் இதயத்தின் அடித் தளத்தில் ஏற்பட்ட காயம் இப்போது மறைந்து என்றும் ஷாருக்கான் கூறி னார்.

2 comments:

said...

Present beer

Anonymous said...

Hi beermohamed,

Congrats!

Your story titled 'அதிரடியாக ஒடும் ஷாருப்கானின் மை நேம் இஸ் கான்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th February 2010 05:42:04 AM GMT