இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கொள்கையில் நாம் உறுதியாயிருந்தால் நம்மை யாராலும் அழிக்க இயலாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.கே.கே.பெரியசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி பேசியதாவது:
நமது இனப்பற்று பரவிட வேண்டும், உறுதிப்பட வேண்டும் என்ற கருத்தை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடசென்னையில் நடந்த திமுக தொடக்க விழாவில் அண்ணா குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் வளர்த்து விட்ட இந்த இயக்கம் எந்த அளவிற்கு வலுப்பெற்றது என்பதையும், ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் அளவிற்கு வலிமை பெற்றது என்பதையும் நீங்கள் தொடர்ந்து உணர்ந்து அறிந்து வரும் விஷயம்.
இதற்கிடையில் எத்தனையோ புயல்கள் எல்லாம் அடித்தும்கூட இந்த கழகத்தை எதுவும் சாய்த்து விடவில்லை. எதுவும் அழித்து விடவில்லை, அசைக்கவும் இல்லை. என்ன காரணம் என்றால், நாம் கொண்டுள்ள கொள்கை உறுதிதான் அதற்கு காரணம். வேறு எந்த செல்வாக்கும் அல்ல. நம்மிடம் இருந்த கொள்கை உறுதிதான். அந்த உறுதி உங்களிடம் இருக்கின்ற காரணத்தால்தான் அதற்கு மாறாக காரியங்கள் நடைபெறுகின்ற இடத்தில் செயல்பட விரும்பாமல், ஒத்த கருத்தோடு செயல்படக் கூடிய தாய்க் கழகத்தில் இணைந்திட வேண்டுமென்று தாயின் மடிக்கு வந்திருக்கிறீர்கள்.
இந்த அன்பகத்தை அண்ணா திறந்து வைத்தார். நான் அப்போது பொருளாளர். இந்த அன்பகத்தை இப்போது பழுது பார்த்து புதுப்பித்து வசீகரப்படுத்தி நீங்கள் எல்லாம் வந்து அமரக் கூடிய இடமாக ஆக்கியிருப்பவர் இன்றைய கழகப் பொருளாளர் ஸ்டாலின். இதிலிருந்து, நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கின்ற இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருமே கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருந்தால் யாரும் நம்மை அழித்து விட முடியாது.
எத்தனையோ சூழ்ச்சிகள், எத்தனையோ மாய்மாலங்கள், எத்தனையோ மயக்கு வேலைகள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு எதிராக நடைபெற்ற போதிலும் அதிலிருந்து மீண்டு, இந்தக் கழகத்தை நேர் வழியில் நெறிப்படுத்தி கொண்டு செல்கிற இந்தப் பாங்கினை அண்ணாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். அதை தொடர்ந்து பின்பற்றி, நம்மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கொள்கைகளுக்காக நாம் வாழ்கிறோம். அந்தக் கொள்கைகளைக் காப்பாற்றுவோம். பெரியார், அண்ணா போன்றவர்களின் எண்ணங்கள் நிறைவேற தொடர்ந்து நாம் ஒத்துழைக்க வேண்டும், உழைக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Wednesday, 27 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஆமாம் அழகிரியும் ஸ்டாலினும் போதும் தி.மு.க வை அழிக்க. வேறு யாரும் வரத்தேவையில்லை
Post a Comment