Friday, 8 January 2010

சென்னை ஜஸ் ஹவுஸ் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை ஐஸ்அவுஸ் டாக்டர் நடேசன் ரோட்டில் வசித்து வருபவர் முருகன் பிளம்பர். இவரது மனைவி சசிகலா (வயது 23). இவர்க ளுக்கு தியாகு (வயது 8) என்ற மகனும், மீனா (6) என்ற மகளும் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே சசிகலாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சசிகலாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு இது தொடர்பாக சசிகலாவுக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சசிகலாவை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, மார்பு, வயிறு, மர்ம உறுப்பு உள்ளிட்ட 6 இடங்களில் கத்திகுத்து விழுந்தது.எனக்கு மட்டும் சொந்தம் இல்லாத நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று சத்தம் போட்டுக்கொண்டே முருகன் கத்தியால் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கதறி துடித்தபடி சசிகலா போராடியுள்ளார். ஆனால் பூட்டிய வீட்டுக்குள் முருகன் விரட்டி, விரட்டி சசிகலாவை கத்தியால் குத்தி கொலை வெறி தாண்டவம் ஆடியுள்ளார். இதில் வீடு முழுக்க ரத்தக்கறை படிந்துள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை உதவி கமிஷனர் வசந்தகுமாரி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உயிருக்கு போராடி வருகிறார். கத்திக்குத்துப்பட்ட இடங்களில் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனைவியை சரமாரியாக குத்திய கணவர் முருகன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக ஐஸ்அவுஸ் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் வலை விரித்துள்ளனர்.

0 comments: