Sunday 29 November 2009

நிருபர்கள் சரமாரி கேள்வி ? ராமதாஸ் கோவம் பாதியிலேயே வெளியேறினார்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பா.ம.கா.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பேட்டியளித்தார்.அப்போது பத்திரிக்கை நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் கோவமடைந்த ராமதாஸ் பாதியிலேயே வெளியேறினார், அப்போது ராமதாஸ் எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது, நாங்கள் 49" ஓ பாரத்தை பயன்படுத்தி எங்களின் கோவத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறினார். மேலும் நிருபர்கள் வன்னியர் சங்கத்தின் சொத்துக்களை நீங்கள் எடுத்து கொண்டதாக சிலர் குற்றம் சாற்றுகின்றனர் என்று கேள்வி கேட்டனர். அதற்க்கு பதில் அளித்த ராமதாஸ் தெருவில் போகிற நாய்கலுக்கு எல்லம் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை கேள்வி கேட்ட நீ எந்த பத்திரிக்கை, நான் சொல்வது எல்லாம் உன் பத்திரிகையில் போடுவீரா என்று கேட்டார்,மேலும் என் கிட்ட பொறுக்கி கொண்டிருந்த சில நாயகள் தான் அப்படி சொல்லி கொண்டு இருக்கிறது என்று கூறினார், அடுத்து கேள்வி கேட்ட மற்ற பத்திரிக்கை நிருபர் அதே கேள்வியை கேட்டதால் டென்ஷனான ராமதாஸ் நீங்கள் எந்த பத்திரிக்கை என்று கேட்டார். அதற்க்கு பிறகு நிருபர்கள் ஸ்மாதனபடுத்தியும் கேட்காத ராமதாஸ் என் மீது சொத்துக்கள் இருந்தால் நிருபீக்கட்டும். அதன் பிறகு எனக்கு தண்டனை கொடுக்கட்டும் என்று கூறினார், என்னை போல எந்த அரசியல்வாதி நல்லவனாக இருக்கிறான்.எந்த கட்சியிலும் யாரும் என்னை போல இருக்க முடியாது ஏன் இதற்க்கு ஒரு விவாதம் வைத்து கொள்ளலாம என்று கூறி பாதியிலேயே எழுந்து சென்று விட்டார்.

0 comments: