இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்தார்.
அவர் கூறும்போது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தமிழர் என்றாலும் அவர் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர்.அவரது இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் பாடலாக உருவெடுத்துள்ளது.
ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரகுமானிடம் ஏழுமலையான் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து தரும்படி கேட்க உள்ளோம். விரைவில் அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
Saturday, 28 November 2009
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment