Friday, 11 September 2009

உயரப்பறக்குது ஏர் இந்தியா : தாழ்வாகிப்போனது ஜெட் ஏர்வேஸ் : பைலட் போராட்டத்தால் நஷ்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ுதுடில்லி: ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்கால் அந்நிறுவனத்திற்கு ஒரு நாள் நஷ்டம் ரூ.20 கோடி ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட சக பைலட்டுகளை பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் ஜெட்ஏர்வேஸ் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. ஏற்கனவே டிக்கட் புக் செய்தவர்கள் தங்களது டிக்கெட்டை கேன்சல் செய்து வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷடம் ஏற்பட்டுள்ளதாக இதன் வருவாய்துறை நிர்வாக உதவி தலைவர் ராஜ்சிவக்குமார் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 225.3 கோடி நஷ்டக்கணக்கு காட்டியுள்ளது. இந்நிலையில் பைலட்டுகள் போராட்டம் கூடுதலான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியாவுக்கு கொண்டாட்டம்: ஜெட் ஏர்வேஸ் போராட்டத்தினால் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு வருமானம் உயர்ந்துள்ளது. மற்ற விமான நிறுவனங்களுக்கு 10 சதவீத வருமானம் உயர்ந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஸ்டிரைக் காரணமாக விமான டிக்கெட் கிடைப்பதில் சிரமத்துடன் கூடிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனை காரணமாக எடுத்துக்கொண்ட ஏர்இந்தியா, கிங்பிஸ்ஷர் விமானக்கட்டணத்தை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளது. கட்டணம் உயர்த்தக்கூடாது : இந்நிலையில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கட்டண உயர்வு செய்யக்கூடாது என விமான துறை டைரக்டர் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.