இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கோல்கட்டா: ஆயுதங்களுடன் வந்ததால், கோல்கட்டா விமான நிலையத்தில் நான்கு நாட்களாக நிறுத்தி வைக் கப்பட்ட ஐக் கிய அரபு எமிரேடின் விமானப் படை விமானம், நேற்று சீனாவின் ஜியான் யாங் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
ஐக்கிய அரபு எமிரேடின் விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று, அந்நாட்டின் தலைநகர் அபுதாபியில் இருந்து கடந்த ஞாயிறன்று சீனாவுக்கு புறப்பட்டுச் சென் றது. வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக கோல் கட்டாவில் தரையிறங்க அனுமதி கேட்டது. அப் போது, "விமானத்தில் என்ன பொருட்கள் உள் ளன' என்று விமான நிலைய நிர்வாகத்தினரும், சுங்க இலாகாவினரும் வினவிய போது, பைலட் முன் னுக்குப் பின் முரணாக பதில் அளித் தார். இதையடுத்து, விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
அதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில், ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இருந் தன. பைலட் உட்பட 10 பணியாட்களும் இருந்தனர். உடன் விமானம் கோல்கட்டா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. விவரம் அறிந்த ஐக்கிய அரபு எமிரேடு நிர்வாகத்தினர், தங்கள் விமானத்தின் பைலட், விமானத்தில் என்ன உள்ளது என்பதை தெரிவிப்பதில், தவறு செய்து விட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர். இதையடுத்து, விமானம் அது செல்ல வேண் டிய இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கும்படி, ராணுவ அமைச்சகத்தையும், சுங்க இலாகாவையும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
ஐக்கிய அரசு எமிரேடு அரசுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளதால், பிரச்னையை சுமூகமாக தீர்க்கும்படி தெரிவிக்கப் பட்டது. இந்த உத்தரவை அடுத்து, நான்கு நாட் களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானம் நேற்று சீனாவின் ஜியான் யாங் நகருக்கு பறந்து சென்றது.