Monday, 21 September 2009

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எல்லாரும் கொண்டாடுவோம்! இன்று ரம்ஜான். உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா! பெருமானார் (ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படி? பெருநாளன்று, யாரும் பசி பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது. அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளனர். எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்? இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாக செயல்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக, "பித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில் ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப் பதாக வைத்து கொள்வோம். ஆறு பேருக் கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும். ஏழைகள், பணக்காரர்கள் பேதமின்றி இந்த ரம்ஜான் பண்டிகையை எல்லாரும் கொண்டாடுவோம். ஓர் ஆண்டில் ரம்ஜான் எனும் மாதம், திருக்குர் ஆன் வழங்கப்பட்ட அல்லாவிடமிருந்து அருளப்பட்ட மாதம் முழுவதும் நோன்பு இருந்து, ஷவ்வால் பிறை தெரிந்ததும் பெருநாள் எனும் திருநாளை, ஏழை எளிய மக்களுக்கு, "பித்ரா' எனப்படும் தர்மத்தை வழங்கி, அவர்களும் ரம்ஜான் பெருநாள் கொண்டாட வழி வகுத்தனர். புரட்சிகரமான கொள்கைகள், அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் புசிக்காதீர்கள் என ஆணையிட்டார். அனாதைகளை அரவணைத்துச் செல்லக் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என, தாயின் மாண்பை உணர்த்தினார். சாந்தம், சமாதானம், சமதர்மம் என வாழ்ந்து வழிகாட்டிச் சென்ற செம்மல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பெருநாள் எல்லாரும் ஒன்று கூடி மீண்டும் வாழ்ந்து, அவர் வழியில் நடந்து, "தக்பீர்' ஓதி கொண்டாடுவோம். மத நல்லிணக்கத்தின் அடையாளம் : அஹ்லே சுன்னத் ஜமாத் மசூதி: ரம்ஜான் மாதம் நெருங்கும் போதெல்லாம், முஸ்லிம்கள் அதிகம் உள்ள, சென்னை பெரியமேடு பகுதி உற்சாகமாகி விடும். இங்கு நேரு ஸ்டேடியத்துக்கு எதிரே உள்ள, அஹ்லே சுன்னத் ஜமாத் மசூதி தான் இப்பகுதியின் பெரிய சிறப்பு. இது, 1836ல் கட்டப்பட்டது. 173 ஆண்டுகள் பழமையானது. இந்த மசூதியை கட்டியவர் ஒரு பெண்மணி. அவரைப் பற்றிய ஆதாரம் மட்டுமே, மசூதியில் உள்ள கல்வெட்டில் உள்ளது. விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மசூதி அமைந்த சாலையின் தற்போதைய பெயர், சைதன் ஹாம்ஸ் சாலை. ஆனால், இந்த சாலையின் உண்மையான பெயர், "சையத் ஹம்ஸா சாலை!' சையத் ஹம்ஸா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் ஆவார். உ ஹத் போரில் வீர மரணம் அடைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் தான் இப்படி, சையத் ஹம்ஸா என்கிற பெயர் சைதன் ஹாம்ஸ் என்று மாறிவிட்டது. மசூதியின் இடதுபுறம் இந்து கோவிலும், வலதுபுறம் இரு கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன. மத நல்லிணக்கத்திற்கு இந்த மசூதியும், மக்களும் உதாரணமாக உள்ளனர். நாள்தோறும், மாற்று மத சகோதர, சகோதரிகள் நூற்றுக்கணக்கான பேர், தங்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். இந்த மசூதியின் தொழுகையாளிகளிடம் துஆ ஓதிச் செல்கின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் 7,000 பேர் இம்மசூதியில் தொழுகின்றனர். தினசரி ஐந்து வேளை தொழுகைக்கு, 2,000 பேர் வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில், நோன்பு வைத்திருப் போர் இப்தார் திறக்க, சராசரியாக 2,000 பேருக்கு தினமும் நோன்பு கஞ்சி தயாரிக்கப் படுகிறது. இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

0 comments: