இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கறுப்பாக இருந்ததால் திருமணத்தையே நிறுத்தினார் மாப்பிள்ளையின் தாய். இந்த அடாவடி சம்பவம் கேரளாவில் நடந்தது.
மணப்பெண் குண்டு, கறுப்பு, மூக்கு சரியில்லை, நடத்தை சரியில்லை அல்லது கேட்ட வரதட்சணையை தரவில்லை, சொன்னபடி நகை போடவில்லை, சாப்பாடு சரியில்லை, சரியாக கவனிக்கவில்லை என்ற காரணங்களால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டாரை பற்றி அதிகளவில் கேள்விப்பட்டு இருக்கிறோம். கேரள மாநிலம், கோட்டயத்தில் திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளையின் தாய் கூறிய காரணம், எல்லாரையும் வாயடைக்க வைத்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே புன்னத்துரை பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். இவருடைய மகள் ஷில்பா. இவருக்கும் பத்தனம்திட்டை மாவட்டம் ரான்னி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் - லிசி தம்பதியின் மகன் ராஜேஷ§க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை முதல் திருமண வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால், திருமணத்துக்கு வந்த மணமகளின் உறவினர்களை லிசி அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தார்.
திடீரென தனது கணவர் ஆப்ரகாமையும், மகன் ராஜேஷையும் லிசி அழைத்தார். “இந்த திருமணத்தை உடனே நிறுத்துங்கள்” என்று சத்தமிட்டார்.
“ஏம்மா… என்னம்மா ஆச்சு…” என்று ஆபிராகமும், ராஜேஷிம் புரியாமல் கேட்டனர். “கல்யாணத்துக்கு வந்திருக்கிற பொண்ணு வீட்டுக்காரங்கள பாருங்க… எல்லாருமே ஒரே அட்ட கறுப்பு… எனக்கு புடிக்கல… கல்யாணத்த நிறுத்துங்க…” என்று லிசி கூறினார். ஆபிரகாமும், ராஜேஷிம் அதை ஏற்றுக் கொண்டு, திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண்ணின் பெற்றோரிடம் கூறினர். மணப்பெண்ணின் பெற்றோர் சொன்ன எதையும் லிசி காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இதையடுத்து, ஆபிரகாம் குடும்பத்தினர் மீது ஏற்றுமானூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் செய்தனர். போலீசார் மண்டபத்துக்கு வந்து லிசியிடம் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், லிசி திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார். பின்னர், மணப்பெண் வீட்டாருக்கு ரூ.50,000 கொடுத்து விட்டு திருமணத்தை நிறுத்திவிட்டு கிளம்பினார்.
Tuesday, 15 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment