இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னை: நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து இன்று விடை தெரிந்தது. ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது குறித்து நடிகர் விஜய் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார். அரசியலில் சேருவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக பேசப்பட்டு வந்தது. மக்களுக்கு சேவை செய்வது எனது ஆசை என்று மட்டும் கூறி வந்தார். இது குறித்து அவர் முழுதாக மனம் திறக்காமல் இருந்து வந்தார். கடந்த வாரம் விஜய் நிருபர்களை சந்திக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார்.
பேட்டியில் அவர் கூறியதாவது: சினிமா தான் எக்கு முக்கியம். அரசியல் பிரவேசம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை. மக்கராகுலை சந்தி்த்து நான் அரசியல் எதுவும் பேசவில்லை. ராகுலை சந்தித்த போது அவர் என்னை வரவேற்ற விதம் எனக்கு மிக்க பிடித்திருந்தது. நானும் , காங்கிரசும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறை வைத்துள்ளோம். தற்போது எனது மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவேன் . தமிழக மக்களுக்கு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பேன் . இதற்காக நான் களம் இறங்கி போராடவும் தயார். தமிழக ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு . மக்களுக்காக நன்மை செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். தி.மு.க, பெரிதா, காங்கிரஸ் பெரிதா என்று சொல்லக்கூடிய அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது என்றார். அரசியலில் சேருவது குறித்து நான் பிற்காலத்தில் முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்., பொதுசெயலர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் கட்சியில் சேருவாரா என கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். காங்., கதவு திறந்திருக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சென்னையில் இன்று ( 13 ம் தேதி ) அரசியல் சேருவதை தவிர்த்து விட்டார்.
2 comments:
யாராவது பெரிய இடத்தில் இருந்து பெரிய அறிவுரை வந்திருக்கும்,
அன்பர்களே நானே முன்பு ஒரு பெரிய ரசிகன் தான்.
உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிரேன். உண்மையாக தமிழர்களுக்கு பாடுபடும் எவனும் எந்த காரணத்திலும் காங்கிரசுடன் சேர மாட்டான்.
அதுவும் இந்த காலகட்டத்தில் காங்கிரசுடன் இணைந்த இவனை எவ்விதம் தமிழர்களுக்கு பாடுபடும் தலைவன் என்று சொல்வீர்கள்.
Post a Comment