Sunday, 13 September 2009

பள்ளிக் குழைந்தகள் மரணம் ஈவ்டிசிங்கே காரணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் உயிரிழந்தனர். 28 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் நெரிசல் ஏற்பட மழைத்தண்ணீரில் மின்கசிவு இருப்பதாக எழுந்த புரளியே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நெரிசலுக்கு புரளி காரணம் அல்ல என்று தெரியவந்துள்ளது. மாணவிகள் பரீட்சை எழுத தயாராக இருந்தபோது சில மாணவர்களும் பள்ளிக்கு தொடர்பு இல்லாத சில இளைஞர்களும் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மாணவிகள் நெரிசலில் சிக்க இந்த ஈவ்- டீசிங்கே காரணம் என்று தெரியவந்துள்ளது. ஈவ்-டீசிங் செய்த மாணவர்களில் சிலர் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை கூறி முறை கேடாக நடந்துள்ளனர். இதனால் பயந்துபோன மாணவிகள் மாணவர்களிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடினார்கள். மாடிப்படிகளில் வேகமாக இறங்கியபோது ஒரு மாணவி கால் இடறி தவறி விழுந்தார். மற்ற மாணவிகள் அவர் மீது ஒன்றன் பின் ஒன்றாக விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி பலியான 5 மாணவிகள் உடல் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவிகள் தலையில் காயம் இருந்தது தெரியவந்தது. மாணவிகளை ஈவ்- டீசிங் செய்து விரட்டியவர்கள் யார், யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: