Friday, 18 September 2009

அதிர்ச்சியில் காங்கிரஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சட்டசபை தொகுதிகளுக்கும் டெல்லியில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. டெல்லியில் தவார்கா, ஒகாலா ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தன. இதில் தவார்கா தொகுதியை காங்கிரசிடம் இருந்து பா.ஜ.க. தட்டி பறித்து கொண்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திலோத்தமா சவுத்திரியை பா.ஜ.க. வேட்பாளர் பிரத்யூமுன் ராஜ்புத் 11,365 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒகாலா தொகுதியில் ராஷ்டீரியா ஜனதா தனம் வேட்பாளர் முகம்மதுகான், பகுஜன் சமாஜ் வேட்பாளரை 5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் லல்லு பிரசாத் கட்சி முதன் முதலாக டெல்லி சட்ட சபைக்குள் நுழைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் 7-0 என்ற கணக்கில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை வீழ்த்தி இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்துள்ளது. இந்த தோல்வி காரணமாக டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் பலம் 42-ல் இருந்து 40 ஆக குறைந்துள்ளது. பீகாரில் இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம்-லோக் ஜன சக்தி கூட்டணி 9 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர் ஆளும் கூட்டணியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி மூலம் பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் மவுசு குறைய வில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியிடம் இருந்து 7 தொகுதிகளை லல்லுவும், பஸ்வானும் தட்டி பறித்துள்ளனர். இதுகுறித்து லல்லு பிரசாத் கூறியதாவது:- பீகார் மாநிலத்தில் நான் தான் அச்சாணி. என்னை சுற்றித்தான் எல்லாரும் இருக்கிறார்கள். லல்லு போய் விட்டார். கதை முடிந்தது. அவ்வளவுதான் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் நான் மீண்டு வந்து விட்டேன். பீகார் மக்கள் என் மீது அன்பு வைத்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவு மூலம் எங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னை வீழ்த்த சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு நாளும் நடக்காது. இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.

0 comments: