Wednesday, 18 April 2012

இந்திய பாராளுமன்ற குழுவினர் கொழும்பில் பல தரப்பினருடனும் சந்திப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள
இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்றுக் காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் முதலாவது சந்திப்பாக நேற்றுக் காலை இந்த சந்திப்பு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய லோக் சபா, ராஜ்ய சபா என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல கட்சிகளையும் சேர்ந்த 12 பேரடங்கிய குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் நேற்றுக் காலை 9.30க்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை சுமார் 10.30 மணி வரை நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது யுத்தம் முடிவடைந்த நாள் முதல் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல், வீடமைப்பு, வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்பு, மீன்பிடித்துறை மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அமைச்சர் பசில் விளக்கமளித்தார்.தற்போது 95 சதவீதமான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன் இந்திய அரசின் உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 50,000 வீடமைப்புத் திட்டமும் இந்திய அரசின் உதவியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 வருட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்ட அமைச்சர் பசில், இந்த விடயத்தில் இலங்கைக்கு கூடுதல் அனுபவம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் உட்கடமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் போன்ற பாரிய உதவிகளை செய்துள்ளமை குறித்து இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஸ்ரீமதி சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகள் தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் உண்மையான நிலை குறித்து தமிழக மக்களிடையே தெளிவுபடுத்தக் கூடிய விதத்தில் ஒரு பிரசாரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தூதுக் குழுவினர் அமைச்சர் பசிலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டினர்.
மேலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமாயின் இரு இனங்களுக்கிடையேயும் உள்ள சந்தேகங்கள் களையப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் சந்திப்பு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடனான சந்திப்பை அடுத்து இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இந்திய குழுவினரை வரவேற்றார். இதனையடுத்து பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அனைத்து கட்சி எம்.பிக்களையும் தூதுக் குழுவினர் சந்தித்தனர்.
வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பையடுத்து இவர்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சருடன் கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள கோல்பேஸ் ஹோட்டலில் மதிய போசன விருந்துபசாரத்திலும் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பு
மாலை 4.30 க்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடனான சந்திப்பு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா உள்ளிட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் இச்சந்திப்பின் போது கலந்துகொண்டனர். அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்தும் கூட்டமைப்பு எம்.பிக்கள் விளக்கமளித்தனர்.
இ. தொ. கா.வுடன் சந்திப்பு
நேற்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸினரையும் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை 5.00 மணிக்கு இ. தொ. கா.வுடனான சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட இ. தொ. கா. பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு எதிர்வரும் 21 ,u திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நீதி அமைச்சரும், மு. கா. தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இல்லாத காரணத்தினால் இச்சந்திப்பு இடம்பெறவில்லை. எனவே 21 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்திய நட்புறவு கலந்துரையாடல்
முன்னதாக இந்திய பாராளுமன்ற எம்.பிக்கள் குழுவினரை வரவேற்ற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்திய தூதுக் குழுவின் வருகை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு மேலும் பலமடைய கூடுதல் பங்களிக்கும் என்றார்.
இதன்போது அவர் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் தெளிவுபடுத்தினார். இலங்கை பாராளுமன்றக் குழு இந்தியா சென்ற போது அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும் நன்றி கூறினார்.
இங்கு இந்திய தூதுக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் அடங்கலான இந்தியக் குழுவினர் மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, த. தே. கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன், ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க் கட்சி எம்.பிகளும் கலந்துகொண்டனர்.
ந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை வவுனியா மனிக் பாமிலுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்திக்கின்றனர்.
இதனையடுத்து அவர்கள் முல்லைத்தீவு பயணமாகின்றன

1 comments:

said...

As stated by Stanford Medical, It's indeed the SINGLE reason this country's women live 10 years longer and weigh on average 19 kilos lighter than us.

(And really, it has totally NOTHING to do with genetics or some hard exercise and really, EVERYTHING about "HOW" they eat.)

BTW, What I said is "HOW", not "what"...

Click on this link to determine if this little quiz can help you find out your true weight loss potential