Tuesday, 11 December 2012

12-12-12

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளும்
கூட. பொதுவாகவே ரஜினி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் அவரது ரசிகர்கள், இந்தாண்டு இப்படியொரு(12.12.12) சிறப்பு தினத்தில் வருவதால் இந்த பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் 5 எழுத்து தாரகை மந்திரம்தான் ரஜினிகாந். குழந்தகள் தொடங்கி முதியவர்கள் வரை யாரையும் கவர்ந்திழுக்கும் ஒரு வசீகர நடிகன். அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், “சூப்பர் ஸ்டாராக‌ உயர்ந்து சிகரம் தொட்ட ஓரு அற்புதக்கலைஞர் ரஜினிகாந். இன்று (12.12.2011)இவர் தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவருக்கு 61வது பிறந்தநாளாக இருந்தாலும் இவ் வருட பிறந்தநாளை இவரது ரசிகர்கள் அவரின் முதலாவது பிறந்தநாள் என்றே சொல்கிறார்கள் காரணம் இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று சிகிற்சை பெற்று நாடு திரும்பி இவருக்கு இதுதான் முதல் பிறந்தநாள் என்பதே இதற்கு காரணம். இப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவது கொண்டுள்ள எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்ஸ்டார் இணையத்தளமும் உலகம்முழுவதும் பரந்து வாழும் எங்கள் ரசிகர்கள் சார்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்களுக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாந்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மேன்மேலும் அவரது கலைப்பயண‌ம் தொடர இறைவனை வேண்டுகின்றோம். இன்றைய சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் திரையுலக வாழ்க்கையின் வரலாற்று தகவல்கள் சிலவற்றை தமிழ்ஸ்டார் டீம் உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றது. *பெற்றோர்* ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய். “கெய்க்வாட்” என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் “கெய்க்வாட்” என்று அழைக்கப்பட்டனர். ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான். ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார். ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து “ஹெட் கான்ஸ்டபிள்” ஆனார். *ரஜினி பிறந்தார்* ரானோஜிராவ் – ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த். 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி. ரஜினிக்கு சத்தியநாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய். ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி. *பள்ளிப்பருவம்* குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார். ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார். உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். /*தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதி விட்டார். கையை எடுத்து முத்தமிட்டார்*/. அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார். விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை. இவ்வறு மிகவும் உருக்கமாக நெகிழ்சியாக செல்கிறது இவரது இளமைகால வரலாறு.. தந்தையின் விருப்பப்படி கல்லூரியில் சேர்ந்த ரஜினிகாந்த், படிக்கப் பிடிக்காமல் வேலை தேடி சென்னைக்கு ஓடிவந்தார். பல கஷ்டங்களை அனுபவித்தார். கிடைத்த சம்பளத்தில் சினிமா பார்த்து விட்டு, பட்டினி கிடந்தார். பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்தபோது ரஜினிக்கு வயது 16. அரும்பு மீசை வளரத் தொடங்கிய பருவம். “சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், பையன் கெட்டுப்போய் விடுவான். கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டும்” என்று, ரஜினியின் தந்தை முடிவு செய்தார். தந்தையின் வற்புறுத்தல் காரணமாக, வேறு வழியின்றி கல்லூரியில் “பி.யு.சி” வகுப்பில் சேர்ந்தார், ரஜினி. சில மாதங்கள்தான் படித்தார். படிப்பு வேம்பாய்க் கசந்தது. கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காகக் கொடுத்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு, சென்னைக்கு ரெயில் ஏறிவிட்டார். இந்தக் காலக்கட்டத்தில், ரஜினி சினிமாப் படங்கள் பார்ப்பது உண்டு என்றாலும், சினிமாவில் நடிக்கும் ஆசை வரவில்லை. ஏதாவது வேலை தேடலாம் என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு வந்தார். ஆனால், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை. பணம் கரையக் கரைய, பயம் ஏற்பட்டது. கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு போதிய வருமானமும் இல்லை; வேலையும் பிடிக்கவில்லை. எனவே, பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார். *மீண்டும் சென்னை* பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்கள்தான் வேலை பார்த்தார். அதன்பின் வேலை பிடிக்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார். சென்னையில் வேலை தேடி அலைந்தார். அப்போது மிட்லண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த “எதிர்நீச்சல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தை போய்ப்பார்த்தார். மறுநாள், ஒரு கட்டிட காண்டிராக்டரிடம் சித்தாள் வேலை கிடைத்தது. அங்கு கிடைக்கும் சம்பளத்தில் நிறைய சினிமா படங்கள் பார்த்தார். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. குணச்சித்திர வேடங்களில் சிவாஜியின் நடிப்பையும், வீரதீரச் செயல்கள் நிறைந்த காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிப்பையும் கண்டு பிரமித்தார். கையில் கிடைக்கும் காசில் சினிமா பார்த்துவிட்டு, பல நாள் பட்டினி கிடந்திருக்கிறார். ஒருநாள் இப்படி சினிமா பார்த்துவிட்டு, “எல்.ஐ.சி” கட்டிடத்தின் முன், பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கினார். இரவில் ரோந்து சுற்றிய போலீசார், சந்தேகக் கேசில் அவரைப் பிடித்து “லாக்-அப்”பில் வைத்துவிட்டனர். மறுநாள் காலை விசாரணை நடத்தியதில், அவர் நிரபராதி என்று தெரிந்தது. உடனடியாக விட்டுவிட்டனர். போதிய வருமானம் இல்லை. பசி – பட்டினியுடன் எத்தனை நாள் காலம் தள்ளமுடியும்? மீண்டும் பெங்களூருக்குத் திரும்ப முடிவு செய்தார், ரஜினி. டிக்கெட் வாங்கக்கூட கையில் பணம் இல்லை. `வருவது வரட்டும்’ என்று தீர்மானித்து, பெங்களூர் ரெயிலில் ஏறி, பெஞ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டார். நல்லவேளையாக டிக்கெட் பரிசோதகர் எவரும் வரவில்லை. மறுநாள் காலை பத்திரமாக பெங்களூர் போய்ச் சேர்ந்தார். வீட்டுக்குப் போனபோது, யாரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியதால், கோபமாக இருந்தார்கள். `ஏதாவது வேலை பார்த்தால்தான் இனி மரியாதை கிடைக்கும்’ என்று தீர்மானித்த ரஜினி, ஒரு தச்சுப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில நாட்கள் கழித்து, ஒரு ஒர்க்ஷாப்பில் சேர்ந்தார். அந்த வேலையும் பிடிக்கவில்லை. ஒரு அரிசி மண்டியில் உள்ள லாரி ஷெட்டுக்கு போனார். அங்கு வேலை கிடைத்தது. அதாவது மூட்டை தூக்கும் வேலை! அரிசியைச் சுமந்து, லாரியில் ஏற்றவேண்டும். 60 மூட்டையைத் தூக்கினால் 2 ரூபாய் கூலி. ரஜினிகாந்த் 180 மூட்டைகளை தூக்கிப்போட்டு, ஒரு நாளைக்கு 6 ரூபாய் சம்பாதித்து விடுவார். ரஜினி மீது அவர் அண்ணி தாய்ப்பாசம் வைத்திருந்தார். இரவில் நேரம் கழித்து வந்தாலும், அவருக்கு சாப்பாடு போட்டு விட்டுத்தான் தூங்கப்போவார். இப்படி இவர் கன்டக்க்ரககும் முதல் இவரின் வரலாற்றுத்தகவல்கள் இப்படி விரிந்து செல்கின்றது இதன் பின்னர் கன்டக்கராக பணியாற்றும் போதும் ட்ரைவராக பணியாற்றிய இவரின் நண்பன் (ட்ரைவர்) இன் தூண்டுதலில்நடிகராக விரும்பி சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். *சினிமா துறையில் வரலாறு..* 1975ஆம் ஆண்டு புத்தண்ணா கனகால் இயக்கிய 'கதா சங்கமா' என்ற கன்னட படத்தில் முதன் முதலாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி (1977), அவர்கள் (1977), 16 வயதினிலே (1977), காயத்ரி போன்ற படங்கள் அவரை மிகச்சிறந்த வில்லத்தனமான நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது(1979) வரை போன்ற படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பில்லா, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் அவர் அதிரடி நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தில்லுமுல்லு படம் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக உலகுக்கு வெளிக்காட்டியது. பில்லா இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'டான்' படத்தின் தமிழாக்கம் ஆகும். அமிதாபச்சனின் பிற படங்களான குத்-தார், நமக் ஹலால், லாவாரிஸ், திரிசூல் மற்றும் கஸ்மே வாதே போன்ற படங்கள் முறையே படிக்காதவன், வேலைக்காரன், பணக்காரன், மிஸ்டர் பாரத் மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற பெயர்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவரின் 100 வது படமான ஸ்ரீ ராகவேந்திரர், சமயத்துறவி ராகவேந்திரரின் வாழ்க்கையைப் பற்றிய படமாகும். 90களில் இவர் நடித்து வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா, போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது. இவ்விரு திரைப்படங்களும் இன்றளவிலும் திரையிடப்படும் இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் அமோக வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் முத்து தான். ரஜினிகாந்த் தாமே திரைக்கதை அமைத்த படம் வள்ளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்து வெளிவந்த படம் படையப்பா மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002ல் இவர் நடித்து வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் அடுத்து 2005 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது. இதன் பின்னர் 2010 ல் எந்திரன் படம் மிகவு அதிக பொருட் செலவில் வெளிவந்து பலசாதனைகளை படத்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையே ஏற்ப்படுத்தியது என்று சொன்னால் மிகையாகது ரஜினிகாந்த், தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிலட் ஸ்டோன் (Blood Stone) (1988). *ரஜினிகாந்த் பெற்ற விருதுகள்* படையப்பா, பெத்தராயடு, பாட்ஷா, முத்து, அண்ணாமலை, தளபதி, வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். புவனா ஒரு கேள்விக்குறி நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். வள்ளி படத்திற்காக சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும், 1995 ஆம் ஆண்டு ரஜனீஷ் ஆசிரமத்தின் ஓஷோபிஸ்மிட் விருதையும், 1995ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கலைச்செல்வன் விருதையும், 2007 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் ராஜ் கபூர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கௌரவித்துள்ளது.
நன்றி : தமிழ் ஸ்டார் 

6 comments:

Anonymous said...

How to unlock your phone for free
Unlock Nokia 3606
Unlock Nokia 5800 XpressMusic
Unlock Nokia 6263

Anonymous said...

A lot of quality articles i see on your www.blogger.com
Unlock Nokia C6 01
Unlock Nokia 6555
Unlock Nokia 7510

Anonymous said...

www.blogger.com gives me so much fun, thanks

http://topbettingtips.tumblr.com

Anonymous said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

said...

Earn from Ur Website or Blog thr PayOffers.in!

Hello,

Nice to e-meet you. A very warm greetings from PayOffers Publisher Team.

I am Sanaya Publisher Development Manager @ PayOffers Publisher Team.

I would like to introduce you and invite you to our platform, PayOffers.in which is one of the fastest growing Indian Publisher Network.

If you're looking for an excellent way to convert your Website / Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Publisher Network today!


Why to join in PayOffers.in Indian Publisher Network?

* Highest payout Indian Lead, Sale, CPA, CPS, CPI Offers.
* Only Publisher Network pays Weekly to Publishers.
* Weekly payments trough Direct Bank Deposit,Paypal.com & Checks.
* Referral payouts.
* Best chance to make extra money from your website.

Join PayOffers.in and earn extra money from your Website / Blog

http://www.payoffers.in/affiliate_regi.aspx

If you have any questions in your mind please let us know and you can connect us on the mentioned email ID info@payoffers.in

I’m looking forward to helping you generate record-breaking profits!

Thanks for your time, hope to hear from you soon,
The team at PayOffers.in

said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News