Monday 7 November 2011

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:-
வருடாந்த ஹஜ் யாத்திரையின் நிறைவாக இஸ்லாமிய சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் யாத்திரிகர்கள் புனித மக்காவில் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுகின்ற காட்சி தங்களது ஆன்மீக வாழ்க் கையை வளப்படுத்திக் கொள் வதற்கும் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வதற்குமான அவர்களது அர்ப்பணத்தை வெளிப்படுத்து கின்றது.
இஸ்லாமியப் போதனை கள் நல்லொழுக்கத்தினதும் நற்கருமங்களினதும் முக்கியத்துவத்தையும் மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நற்புணர்வையும் கட்டியெழுப்புவதையும் சமயக் கடமைகளுக்கு ஏற்றவிதத்தில் அர்ப்பணமிக்க ஒரு வாழ்க்கையை முன்னெடுப்பதையும் வலியுறுத்துகின்றது. ஹஜ் யாத்திரை காலப் பகுதியில் முஸ்லிம்கள் மானிட நலன்களுக்கும் தங்களது சொந்த ஆன்மீக மேம்பாட்டுக்கும் பங்களிக்கும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு முழுமையாக முயற்சி எடுக்கின்றனர்.
இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட் டின் சமூக, கலாசார, பொருளாதார முன் னேற்றத்திற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் மக்கள் ஐக்கிய இலங்கைக்கான அவர்களது அர்ப்பணத்தை வெளிப்படுத்தி இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்க ளுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் இன்று நாடெங் கிலும் தங்களது சமய நம்பிக்கைகளையும் வணக்க வழிபாடுகளையும் சுதந்திரமாக மேற்கொள்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட் டுள்ளது. அந்த வகையில் எமது தாய்நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த பயங்கரவாத இருள் சூழ்ந்த யுகத்திலிருந்து நாம் தற் போது விடுபட்டுள்ளோம். ஈதுல் அல்ஹா உணர்த்தி நிற்கும் தியாக உணர்வு எல்லா சமூகங்களினால் மிகுந்த தியாகத்துடன் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தைப் போற்றிப் பேண அவர்களுக்கு உதவும்.
இந்த முக்கியமான பெருநாள் தினத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாடுவதற்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எனது நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: