Sunday, 11 September 2011

ரஞ்சிதா சிடி தொடர்பான வழக்கு : சினிமா தயாரிப்பாளர் அய்யப்பன் பரபரப்பு பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் எம்.பி.ராம் முன்பு ஆஜர்படுத்த அவர்களை ஜீப்பில் அழைத்து வந்தனர்.
 அப்போது, ஐயப்பன் ஜீ¢ப்பிலிருந்து இறங்க முடியாமல் தடுமாறினார். அவருடைய 2 கால்களிலும் நிறைய காயங்கள் இருந்ததால் அவரால் இறங்க முடியவில்லை. பின்னர் அவரை சிபிசிஐடி போலீசார் கைத்தாங்கலாக ஜீப்பில் இருந்து இறக்கி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அவர் அங்கு கூடியிருந்த நிருபர்களை பார்த்து அய்யப்பன் கதறினார். ‘Ôபோலீஸ்காரங்க எனக்கு தெரியாத விஷயத்த கேட்டு அடிக்கிறாங்க. நடக்க முடியாத அளவுக்கு கால் ரெண்டும் வீங்கிப் போச்சு..’’ என்றபடி காலில் இருந்த காயங்களை காட்டி அழுதார். பின்னர் அய்யப்பனையும், சக்சேனாவையும் போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, மாஜிஸ்திரேட், ‘‘நித்ய ஆத்ம பிரமானந்தா என்பவர் ஜூலை 31ம் தேதி கொடுத்த புகாரில், 2010 பிப்ரவரி 17ம் தேதி ஐயப்பன், அவரது உதவியாளர் கண்ணன் ஆகியோர் தன்னிடம் நித்யானந்தா ஒரு பெண்ணோடு ஒரே அறையில் இருக்கும் சிடியை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி தர வேண்டும் என்று மிரட்டி 10 லட்சத்தை பறித்ததாக பாண்டிபஜார் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் உங்களை கைது செய்துள்ளனர்’’ என்றார்.
அதற்கு சக்சேனா, “ஏற்கனவே என்னிடம் விசாரணை நடத்திய டிஐஜியும், டிஎஸ்பியும் உங்கள் மேல் இந்த வழக்கில் எந்த புகாரும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், தேவையில்லாமல் எங்களை இரண்டரை மாதம் சிறையில் வைத்துள்ளனர்’’ என்றார்.அப்போது, அய்யப்பன், “இதற்கு முந்தைய வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து கூட்டிச் சென்றனர். போலீஸ் காவலில் நடந்த விசாரணையில் என்னை கடுமையாகத் தாக்கினார்கள். எனது கால், தொடையிலிருந்து ரத்தம் வழிந்தது. 2 வேட்டியால் ரத்தத்தை துடைத்தனர். பின்னர் அவர்களே வேறு வேட்டி வாங்கிக் கொடுத்தனர். நாங்கள் அடித்ததை வெளியே சொன்னால் என்கவுன்டரில் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார்கள்’’ என்றார்.

மாஜிஸ்திரேட்: போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது ஏன் இதைச் சொல்லவில்லை?
அய்யப்பன்: இருபது போலீசார் என்னை சுற்றி நின்று கொண்டு, ‘அடித்ததாக சொன்னால், போகிற வழியில் தப்பி ஓட முயன்றதாக சொல்லி உன்னை சுட்டு விடுவோம்’ என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள். அதனால்தான் சொல்லவில்லை. ஆனால், இப்போது, என்னால் நிற்கக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு அடித்துள்ளார்கள்.
மாஜிஸ்திரேட்: இந்த வழக்கில் வரும் 23ம் தேதிவரை நீதிமன்ற காவலுக்கு இருவரையும் அனுப்ப உத்தரவிடுகிறேன்.

சக்சேனா: போலீஸ் காவல் விசாரணையின்போது எனக்கு பிரஷர் அதிகமாகி 3 முறை இசிசி எடுத்தார்கள். ஆனால், மருத்துவ உதவி எதுவும் தரவில்லை. என்னை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். சிபிசிஐடி போலீசார்தான் அடித்தனர் என்று சிறை அதிகாரிகள் அய்யப்பனிடம் எழுதி வாங்கினார்கள். ஆனால், அடித்ததை சொல்லக் கூடாது என்று சிபிசிஐடி போலீசார் மிரட்டுகிறார்கள்.

அய்யப்பன், சக்சேனா இருவருக்கும் மருத்துவ சிகிச்சை கோரியும், ஜாமீன் கோரியும் 2 மனுக்களை வக்கீல் செந்தில்குமார் தாக்கல் செய்தார். மேலும், அய்யப்பனை போலீஸ் தாக்கியது தொடர்பான எல்லா விவரங்கள் அடங்கிய மனுவையும் நீதின்றத்தில் தாக்கல் செய்தனர்.
மாஜிஸ்திரேட்: இருவரின் ஜாமீன் மனு மீது வரும் 13ம் தேதி விசாரணை நடத்தப்படும். இருவருக்கும் போதிய மருத்துவ சிகிச்சை தர வேண்டும். தேவைப்படுமானால் இருவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது.

இதையடுத்து, இருவரையும் சிபிசிஐடி போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மனித உரிமை கமிஷனில் புகார்
வக்கீல் செந்தில்குமார் கூறியதாவது: எல்லா வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துவிட்டதால் எப்படியாவது சிறையில் தொடர்ந்து அய்யப்பன், சக்சேனாவை வைக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் இந்த வழக்கில் மீண்டும் கைது செய்துள்ளனர். அய்யப்பனை போலீசார் மிருகத்தனமாக தாக்கியது தொடர்பாக மனித உரிமை கமிஷனில் புகார் தெரிவிப்போம். பொய்யான வாக்குமூலம் பெறுவதற்காக, காவல்துறை உயர் அதிகாரிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அய்யப்பனை தாக்கிய அதிகாரிகள் மீது, உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடர உள்ளோம்.

0 comments: