இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அ. தி. மு. க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, பொய் வழக்கிற்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது?’ என்றும் அவர் கேட்டுள்ளார். தி. மு. க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த கால தி. மு. க. ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி. ஜி. பி. யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட், ஐ. பி. எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப்பெற்று, அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதான் அவர் மீது குற்றச்சாட்டு. அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ. தி. மு. க. ஆட்சியிலேதான்.
முதல் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகளைத்தான் விருப்புரிமை அடிப்படையிலே அரசு வழங்கலாம் என்று இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு அ. தி. மு. க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் விருப்புரிமை 10 சதவீதம் என்பதை 15 சதவீதம் என்று உயர்த்தி வழங்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர்கள்தான்.
வீட்டு வசதி சபையின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவீதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் மீதியுள்ள 15 சதவீதத்தை அரசு தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அ. தி. மு. க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.
விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் அரசு அதனைப் பரிசீலனை செய்து அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று 7.12.2010ல் கழக அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறி, அது ஏடுகளிலேயே வெளி வந்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் வீட்டு வசதி சபையின் வீட்டு மனைகளை விருப்புரிமை அடிப்படையிலே பெற்றவர்கள் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ. ஏ. எஸ். க்கு 1993 ஆம் ஆண்டு 4115 சதுர அடி தற்போது அமைச்சராக உள்ள கே. ஏ. செங்கோட்டையன் மகன் கே. எஸ். கார்த்தீசனுக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995 ஆம் ஆண்டு 4535 சதுர அடி.
முன்னாள் அமைச்சர் நாகூர் மீ¡ன் துணைவியாளர் நூர் ஜமீலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993 ஆம் ஆண்டு 2559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி பானுமதி தம்பித்துரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம், அ. தி. மு. க.வின் தொழிற்சங்கப் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்.
அ. தி. மு. க.வைச் சேர்ந்த எஸ். எம். வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993 ஆம் ஆண்டு வீடு அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டால் காவல் துறை அதிகாரிகளிலேயே தேவாரம், கே. விஜயகுமார், ஆர். நடராஜ், பி. காளிமுத்து, இக்பால் முகமது, ஏ. பி. முகமது அலி, கே. ராதா கிருஷ்ணன், வி. பாலச்சந்திரன், சி. சைலேந்திரபாபு, எஸ். வி. கருப்புசாமி, சிற்றரசு, ஆர். திருநாவுக்கரசு. எப். எம். உசேன், ஜி. சம்பத்குமார், செந்தாமரைக் கண்ணன் கே. சண்முகவேல், பி. சின்னசாமி, சஞ்சய் அரோரா, தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா, அசோக் குமார் போன்றவர்கள் வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளையோ வீடுகளையோ பெற்றிருக்கிறார்கள். ஆனால் இதில் எதையும் தி. மு. கழக ஆட்சியில் தவறு என்று சுட்டிக்காட் டவில்லை என்றும் உள்ளது.



0 comments:
Post a Comment