Saturday 30 July 2011

ரஜினி கடவுளுக்கு நிகரானவர் ஜூம் தொலைக்காட்சி புகழாரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி, கடவுளுக்கு
நிகரானவர் என புகழாரம் சூட்டியுள்ளது.
பொலிவுட்டின் ‘டாப் 50 பிரபலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூம் தொலைக்காட்சி.

இது “டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சானல் ஜூம் சூப்பர் நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த அணி வரிசை.

இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற் றுள்ளது. இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் தொலைக்காட்சி.

ரஜினியைப் பொறுத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது. இந்த பொலிவுட் அலைவரிசை

ஷாரூக்கான் 4வது இடத்திலும் ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும் அமிதாப் பச்சன் 6வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில்.
இந்தப் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது. தென்னிந்தியா விலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளனர்.

0 comments: