Sunday 19 June 2011

பெண்கள் மீதான வன்முறை இந்தியாவுக்கு நான்காவது இடம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட ஆய்வில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது. உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான இடங்கள் எவை என்று செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. சுகாதார பிரச்சனை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறைகள்,பண்பாடு, மதம், மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள்கடத்தல் போன்ற வன்முறைகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதில், ஆப்கானிஸ்தானில்தான் பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே பெண்களுக்கான அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஆப்கான் முன்னணி வகிக்கிறது. இதனிடையே ஆப்பிரிக்காவின் காங்கோ இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தைப் பாகிஸ்தானும் பிடித்துள்ளது.
பெண்சிசுக் கொலை, பெண்குழந்தைகள் கொலை, மற்றும் ஆட் கடத்தல் போன்ற வன்முறைகள் இந்தியாவில் அதிகளவில் நடப்பதால், நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதனிடையே கடந்த 2009-ஆம் ஆண்டு சி.பி.ஐ மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் ஆட்கடத்தல் 90% விழுக்காடு என்ற தவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதிலும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்களில் 40% சிறுமிகள் என்றும் தெரியவந்துள்ளது.

0 comments: