Sunday 17 April 2011

இலங்கை காத்தான்குடியில் அரபுமொழி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் நகர
சபையின் ஆளுமைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் ஒழுங்கைகளின் பெயர்ப் பலகைகளில் "அரபு "மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் பிரதேசம் காத்தான்குடி பிரதேசமாகும்.
தமது பிரதேசத்திற்கு தப்லீக் ஜமாத் மற்றும் தஹ்வா அமைப்புகள் என வருகை தரும் அரபியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், வீதிகளை இலகுவாக அவர்கள் அடையாளம் காண்பதற்காகவே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கு மேலதிகமாக நான்காவது மொழியாக அரபு மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நகர சபையின் தலைவர் எஸ்.எச்.மொகமட் அஸ்பர் கூறுகின்றார்.
இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படாத மொழியொன்று பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருப்பதை சர்ச்சைக்குரிய விடயமாக தான் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
நான்காவது மொழியாக அரபு மொழி இடம்பெறுவதற்காக மத்திய மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சுகளிடமிருந்து எவ்வித அனுமதியையும் தான் கோரவில்லை என்றும் நகரசபைத் தலைவருக்குரிய அதிகாரத்தை தான் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கும் அவர், காத்தான்குடி நுழைவாயிலில் அமைந்திருந்த வரவேற்பு வளைவில் கூட ஏற்கனவே அரபு மொழிக்கும் இடமளிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

0 comments: