Wednesday, 23 March 2011

அமெரிக்க தேவாலயத்தில் குரான் எரிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குரான் நூல் குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக அந்த தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பவரால் குரான் கொளுத்தப்பட்டுள்ளது.
டெர்ரி ஜோன்ஸ் ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் திகதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

0 comments: