இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
திமுகவை மிரட்டும் காங்கிரசின் போக்கு அதன் கூட்டணி கட்சிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தனது பலமே பெரியது என்று நினைத்துக் கொண்டு திமுகவிடம் 3 நிபந்தனைகளை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என திமுக முன்னணி தலைவர்கள் கருதுகின்றனர். மேலும் திமுக அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் காங்கிரசின் உதவி இன்றி தேர்தலை எதிர்கொள்ளலாம் என மூத்த தலைவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசை துச்சமாக எண்ணி தூக்கிப் போட வேண்டும் என முதல் கூறியதாக தகவல் கசிந்திருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த இரண்டு திருமண விழாக்களில் கலந்து கொள்ள வந்த கருணாநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபோது திமுக முன்னணியினர் காங்கிரஸ் நமக்கு தேவை இல்லை என அதிரடியாய் கூறி அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றனர். எனினும் அவர்களின் இந்த பதிலுக்கு முதல்வர் எத்தகைய பதிலை கொடுத்தார் என்பது தெரியவில்லை. அத்தோடு இம்முறை இந்த கூட்டணி தொடர்ந்தால் திமுக சார்பில் காங்கிரசுக்கு தேர்தல் பணிபுரிவோரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

1 comments:
மற்றவர்கள் மீது இவர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்தை இவர்கள் மீது அவர்கள் செய்கிறார்கள். இந்த வழிதான் இவர்களுக்குப் புரியும்.
Post a Comment