Tuesday 14 December 2010

ராகுல் காந்தி திடீர் மலேசியா பயணமா ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி
நேற்று திடீரென மலேசியா புறப்பட்டுச் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக ராகுல் காந்தி எங்கு செல்வதாக இருந்தாலும் பாதுகாப்பு பரிவாரங்களுடன் தான் செல்வார். அவ்வப்போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கு கூடத் தெரியாமல் குடிசைகளுக்கு திடீர் விஜயம் செய்வார். தற்போது எந்த வித பாதுகாப்பும் இன்றி அவர் மலேசியா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் சொந்த விஷயமாக மலேசியா வந்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வீட்டிற்கு சென்ற அவருக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மலேசியா இந்திய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் டி.மோகன் ராகுலை சந்தித்துப் பேசினார் என்றும் இந்திய இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பற்றி திரு.டி.மோகன் அவர்களிடம் கருத்து அறிய தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

0 comments: