Thursday 9 December 2010

நித்யானந்தா மீது பெண் என்ஜினீயர் கற்பழிப்பு புகார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கீதா   (பெயர் மாற்றம்) அங்குள்ள சிஐடி போலீசாரிடம், தன்னை சாமியார் நித்யானந்தா மது அருந்த வைத்து கற்பழித்து விட்டதாகி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்றேன். அங்கு நடந்த பல்வேறு யாகங்களில் கலந்து கொண்டேன். நித்யானந்தாவின் சொற் பொழிவுகளை அடிக்கடி கேட்டேன். இதில் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இதனால் அவரது அறைக்கு அடிக்கடி சென்று ஆசி பெறுவேன்.
ஒருநாள் நான் அவரிடம் ஆசி பெற சென்ற போது மதுபானம் வாங்கி வா என்று கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுபற்றி நான் அங்கிருந்த சீடர்களிடம் போய் சொன்னேன். அதற்கு அவர்கள், சுவாமிஜி எது சொன்னாலும் அதை அப்படியே செய். அவரை ஒருபோதும் எதிர்த்து பேசி விடாதே. தெய்வ குற்றமாகி விடும் என்று பயம் காட்டினார்கள்.
உடனே நான் மைசூர் ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து நித்யானந்தாவிடம் கொடுத்தேன்.
சிறிது நேரம் தியானம் செய்த அவர் அந்த மது பாட்டிலை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. எனக்கு மது அருந்தி பழக்கம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் சாமி என்று கெஞ்சினேன்.
அதற்கு அவர், மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் தியாக குணம் அவசியம். அந்த குணத்தை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் குடிக்கச் சொன்னேன். இதில் தவறு எதுவும் இல்லை என்றார்.
இதனால் நான் மது குடித்தேன். சிறிது நேரத்தில் நான் போதையில் மயங்கியதும் என்னை நித்யானந்தா பலவந்தமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். ஏன் என்னை நாசப்படுத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இதுதான் மோட்ச மார்க்கம். கவலைப்படாதே என்று கூறினார்.
சிலநாள் கழித்து அவர் என்னையும் மேலும் சில இளம்பெண்களையும் அமெரிக்காவின் லாஸ்வே காஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை கவர்ச்சியாக உடை உடுத்தும் படி கூறினார். அவரும் காவி உடைக்கு விடை கொடுத்து விட்டு ஜீன்ஸ்-டி-சர்ட் அணிந்து கொண்டார்.
என்னை அங்குள்ள “நிர்வாண கிளப்” ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அவர்களைப் போல் எங்களையும் நிர்வாணமாக நின்று ஆட வைத்தார். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவர் வற்புறுத்தலால் எதுவும் செய்ய முடியவில்லை. லாஸ்வேகாசில் வைத்தும் அவர் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தால் என் மானம் போய் விடுமே என்று கருதி அவர் மீது புகார் எதுவும் செய்ய வில்லை. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது பிடியில் சிக்கி தவித்தேன். அவரது சித்ரவதை தொடர்ந்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன்.
இவ்வாறு கீதா கூறி உள்ளார்.
கீதா விரைவில் பெங்களூரில் உள்ள ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி நித்யானந்தா தன்னை கற்பழித்து சித்ரவதை செய்தது பற்றி ரகசிய வாக்குமூலம் அளிக்க முடிவு செய்துள்ளார்.
பெங்களூர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

0 comments: