Thursday 2 September 2010

300 கோடியை தாண்டும் எந்திரன் உலகம் முழுவதும் பரபரப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘எந்திரன் – தி ரோபோ’
எப்போது ரிலீஸ் என்பது இதுவரைக்கும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் வட்டாரங்களுக்கு சொல்லப்ப்பட்டிருக்கும் ரிலீஸ் தேதி செப்டம்பர் 24 ந் தேதி. மலையாளம், கன்னடம் ஆகிய இரு ஏரியாக்களிலும் நேரடியாக தமிழிலேயே வெளியிடுகிறார்கள். ஆனால் ஆந்திராவில் மட்டும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறதாம்.
மதுரை ஏரியாவை விலைக்கு வாங்கியிருக்கிறார் பிரபல விநியோகஸ்தரான மதுரை அன்புவின் சகோதரர் அழகர். விலை சுமார் 13 கோடி! தமிழகமெங்கும் பெரிய டவுன்களில் ஒரு தியேட்டரில் வெளியிட ஒரு கோடி ரூபாய் என்றும், சிறிய ஏரியாக்களில் ஒரு தியேட்டருக்கு 40 லட்சம் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியுள்ளது ‘பிகஸ் மூவீஸ்’ (FICUS Movies) நிறுவனம் இதுகுறித்து பிகஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எந்திரன் தமிழ்ப் படம் மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ரோபோ ஆகியவற்றின் அமெரிக்க உரிமையை பிகஸ் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பெருமைக்குரிய இந்தப் படத்தை விநியோகிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்திருக்கிறது எந்திரன் பிசினஸ் இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும்,கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும், ரோபோ வெளியீட்டாளர் வீனஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

4 comments:

Anonymous said...

இந்த படம் ஊத்திகிசிசினா அடுத்து ரஜினி அம்போதானா

said...

Anonymous Anonymous said...

இந்த படம் ஊத்திகிசிசினா அடுத்து ரஜினி அம்போதானா

இவர் சொல்வது சரியா உங்கள் கருத்து என்ன

said...

உலகம் முழுவதும் பரபரப்பா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? இந்தியர்களை தவிர யாருக்கு தெரியும் ரஜினியை? இந்தியர்களில், தமிழரை தவிர எத்தனை பேர் இந்த படத்தை பார்க்கபோகிறார்கள்? infact, தமிழரில் எத்தனை பேர் இந்த படத்தை பார்க்கப்போகிறார்கள்?
நாம் இருக்கும் கிணறு தான் உலகம் என்ற என்னத்தை விட்டு வெளியே வாருங்கள்

Anonymous said...

Blogger bandhu said...

உலகம் முழுவதும் பரபரப்பா? உங்களுக்கே இது ஓவரா தெரியலை? இந்தியர்களை தவிர யாருக்கு தெரியும் ரஜினியை? இந்தியர்களில், தமிழரை தவிர எத்தனை பேர் இந்த படத்தை பார்க்கபோகிறார்கள்? infact, தமிழரில் எத்தனை பேர் இந்த படத்தை பார்க்கப்போகிறார்கள்?
நாம் இருக்கும் கிணறு தான் உலகம் என்ற என்னத்தை விட்டு வெளியே வாருங்கள்

thamilan
ஜயா சைனாவில இருக்குறாங்க ஜப்பானில இருக்குறாங்க ,லண்டளில இருக்குறாங்க,அமெரிக்காவில ஒபாமா கூட கேட்டுகிட்டே இருக்கிறாராம் நீங்க உலகம் என்ற மாயை வெளிய வாருங்கள் கிணற்று தவளை மாதிரி இருக்க வேண்ட்டாம்