Wednesday 30 June 2010

இந்தியர் தங்கக்கடைகளில் கொள்ளை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பிரிட்டனில், இந்தியர்கள் நடத்தும் நகைக் கடைகள்
தான் கொள்ளையர்களின் முக்கிய இலக்காக உள்ளன.

கொள்ளையர்கள் அடுத்து எந்தக் கடையில் கை வைப்பார்களோ என்று பிரிட்டன் இந்தியர்கள் பீதியில் உள்ளனர்.

பிரிட்டன் மத்தியப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லீசெஸ்டர் நகரத்தில், பெல்கிரேவ் சாலையில் இந்தியர்களின் நகைக் கடைகள் பெருமளவில் இருக்கின்றன. அதனால் இந்தச் சாலை,"கோல்டன் மைல்' என்றும் அழைக்கப்படுகிறது.

தற்போது பிரிட்டனில் தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதால், அப்பகுதியிலுள்ள கொள்ளையர்கள் இந்தியர்களின் நகைக் கடைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், அங்குள்ள "அலங்கார்' என்ற நகைக் கடைக்கு இரவில் ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள், கடை ÷ஷாகேசின் கண்ணாடிகளை உடைத்து அதிலிருந்த பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.இதேபோல், "பிபின்' என்ற கடையில் புகுந்த கொள்ளையர்கள் வெட்டும் கருவி ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளையடித்துள்ளனர்.

அப்பகுதி போலீசார் இந்திய நகைக் கடைகளுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். அலங்கார் கடையில் நடந்த கொள்ளை வழக்கில் 22 வயதுடைய ஒரு வாலிபரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் கொள்ளைச் சம்பவங்களால் பீதியில் உறைந்துள்ள இந்தியர்கள், கொள்ளையர்களிடம் துப்பாக்கி கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பெல்கிரேவ் தொழில் கூட்டமைப்பின் உறுப்பினரும் ராம் ஜுவல்லர்ஸ் கடையின் உரிமையாளருமான மகுல் விஸ்ரம் கூறுகையில்," இங்குள்ளவர்கள் பயத்தில் உள்ளனர். அடுத்த இலக்கு எந்தக் கடையாக இருக்கும் என்று உறைந்து போயுள்ளனர்.

அவர்களிடம் இந்த கடப்பாரை மற்றும் வெட்டும் கருவி போன்றவற்றைப் பார்க்கும் போது, துப்பாக்கிகளும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது' என்று மகுல் விஸ்ரம் தெரிவித்தார்.இதுகுறித்து அப்பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: