இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நித்யானந்தா நடிகை ரஞ்சிதா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை. அவர் ஜப்பானில் இருக்கிறார் , அமெரிக்காவில் இருக்கிறார் ஜரொப்பாவில் இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது . ஆனால் அவர் இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன் இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.
Monday, 28 June 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment