Monday 7 June 2010

ஐபேட்-க்கு போட்டியாக சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் ஏபேட்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஏபேட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஏபேட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஐபேட்-ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஏபேட்லும் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான்.

0 comments: