இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைமைத்துவத்துக்கான மோதல் தொடர்கிறது.
கட்சித் தலைவர் மு.கருணாநிதியின் மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவருக்கிடை யில் வலுத்துள்ள மோதல் நேரடியாகவும் மறைமுக மாகவும் வெளிப்படுகிறது.
அதிரடி அரசியல் தமக்குத் தெரியாது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து அவரிடமே கேளுங்கள் என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
ஏப்ரல் 1-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “தேர்தல் நடந்தால் தி.மு.க. தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன்,” என்று கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வாரமிரு முறை வெளிவரும் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனக்கு அதிரடி அரசியல் தெரியாது,” என்று கூறியிருந்தார்.
மதுரையில் இருந்து சனிக் கிழமை இரவு சென்னை வந்த மு.க.அழகிரியிடம் விமான நிலையத்தில் இது குறித்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அழகிரி, “அதுபற்றி ஸ்டாலினிடமே கேளுங்கள்,” என்றதாகத் தமிழகச் செய்திகள் தெரிவித்தன.
Monday, 5 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment