இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா என்ற பெண், தனக்கும் சோயிப் மாலிக்குக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ஆதாரங்களை வெளியிட்டார். அதோடு சோயிப் மாலிக் மூலம் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சோயிப் மாலிக் பாஸ்போர்ட்டை ஐதராபாத் போலீசார் முடக்கி உள்ளனர்.
ஆயிஷா கூறும்போது, நானும் சோயிப்மாலிக்கும் துபாய் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருந்ததை முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், அவரது மனைவி சங்கீதா பஜ்லானி ஆகியோர் நேரில் பார்த்தனர். அந்த அறையில்தான் நாங்கள் உல்லாசமாக இருந்தோம். சோயிப்மாலிக் என்னை பார்த்ததே இல்லை என்று தற்போது பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அசாருதீனிடம் இதுபற்றி விசாரித்தால் உண்மை தெரியும். அவரை விட வேறு நல்ல சாட்சி தேவை இல்லை என்று அதிரடியாக கூறி இருந்தார்.
இதுபற்றி அசாருதீனிடம் கேட்டபோது, எந்த விஷயத்திற்குதான் சாட்சி சொல்வது என்று விவஸ்தை இல்லையா? என்று ஆவேசப்பட்டார்.
சானியா- சோயிப் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதில் ஆயிஷா தீவிரமாக உள்ளார். அவருக்கு ஆதரவாக சில இஸ்லாமிய மதக்குருக்களும் சில மகளிர் அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன. இது சோயிப் மாலிக்கிற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
சானியாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆயிஷா என் முதல் மனைவிதான் என்று சோயிப் ஒத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நெருக்கடிக்கிடையே ஐதராபாத் தாஜ் ஓட்டலில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எனவே சானியா திருமண விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பான எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் சானியா மிர்சாவுக்கும் சோயிப் மாலிக்கிற்கும் ஏற்கனவே துபாயில் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக இன்று தகவல் பரவியுள்ளது. சானியாவும் சோயிப்மாலிக்கும் பழகும் விதத்தை வைத்து இந்த தகவல் பரவியுள்ளது.
மேலும் ஐதராபாத் தாஜ் ஓட்டலில் நடப்பது திருமண வரவேற்பு என்று தெரியவந்துள்ளது. சானியா மிர்சா குடும்பத்தினர் அச்சடித்து வினியோகித்து வரும் திருமண அழைப்பிதழில் திருமண வரவேற்பு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது எனவே சானியா- சோயிப் ரகசிய திருமணம் நடந்து விட்டது உறுதியாகி இருப்பதாக கருதப்படுகிறது.
15-ந்தேதி சானியாவுக்கு திருமணம் என்று கூறப்பட்டுள்ள போதிலும் அதற்கான விபரங்கள் வெளியிடப்படவில்லை. திருமணம் எங்கு வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. உறவினர்கள் பலருக்கும் அது தொடர்பாக அழைப்பை சானியா குடும்பத்தினர் இதுவரை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுவும் சானியா, சோயிப் இடையே ரகசிய திருமணம் நடந்து விட்டதை உறுதிபடுத்துவதாக உள்ளது. திருமணத்துக்கு முன்பே சோயிப்புடன் சானியா நெருக்கமாக இருப்பதும், அவர்கள் ஒரே வீட்டில் தங்கி இருப்பதும் திருமணமாகி விட்ட தகவலை மேலும் வலுப்படுத்துவதாக சொல்கிறார்கள்.
சானியா, சோயிப் திருமணம் துபாயில் ரகசியமாக நடந்துவிட்டதாக ஆயிஷாவுக்கும் அவரது நெருங்கிய தோழி மூலம் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஆயிஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக துபாய்க்கு அவர் தன் உறவினர் ஒருவரை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
சோயிப்மாலிக் தற்போது திருமண வரவேற்பில் கலந்து கொண்டுவிட்டு, தேன் நிலாவை கொண்டாடவே வந்துள்ளார் என்றும் ஐதராபாத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment