Wednesday, 10 March 2010

போலி சாமியார்களை அரசாங்கம் ஒழிக்க வேண்டும் யோகி ராம்தேவ் ஆவேசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மதத்தின் பெயரால் மோசடியான செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கும், மத குருக்களுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று யோகா குரு சுவாமி ராம்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிம்லாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், ஏராளமான சாமியார்கள் மோசடி செயல் களில் சிக்கி அவர்கள் மீது பெருமளவில் வழக்குகள் தொடரப்படு வது பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக் கிறது.

குறிப்பாக பாலியல் புகார்களுக்கு ஆளாகும், நிதி முறை கேடுகளில் சிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளைத் தடுக்க ஒருவர் பாபா (குரு) ஆக குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டியது கட்டாய மாகிறது. இதுதொடர்பாக முன்னணி மதத் தலை வர்களுடன் நான் பேசி வருகிறேன்.

மதத் தலைவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்க, கண் காணிக்க கமிட்டி என்று எதுவும் தனியாகத் தேவை யில்லை. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களே இதைப் பார்த்துக் கொள்வார்கள்.

தவறு செய்யும் சாமியார்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார் ராம் தேவ்.

3 comments:

said...

நல்ல செய்தி தான் . ஆனால் மரண தண்டனையை உலகம் முழுவதும் எதிர்த்து வருகிற இந்த கணினி யுகத்தில் குறு ராம்தேவ் சொல்வது எடுபடுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

Anonymous said...

solvathum samiyar tan sayevathum samiayarkal tan super comedyla

Anonymous said...

சுவாமி ராம்தேவ் கடவுளை கும்பிடுவதற்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டுமா ? அது என்ன தகுதி, அதை யாராலும் நிர்னைக்கத்தான் முடியுமா ?
அப்படி என்றால் யாருக்குதான் அது உண்டு . அப்படி ஒன்று வந்தால் ஆசிரமங்களும், சர்ச்சுகளும் ,மசூதிகளும் காணாமல் போய்விடும் அல்லவா? அன்பே சிவம்


Ammi said there are only two kind of people good people and bad people . good people follow the God bad follow Satan.
My name is Khan