இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலனும் காதலியும் நடுத்தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயபுரம் ராமானுஜர் தெருவில் வசிப்பவர்கள் ரமேஷ், பிரகாஷ். இரு வீட்டினருக்கும் இடையே நல்ல உறவு இருந்துவந்தது. ரமேஷுக்கு 18 வயதில் மகனும், பிரகாஷுக்கு 17 வயதில் மகளும் உள்ளனர். இருவரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கின்றனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு இரு வீட்டினரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்மதித்துள்ளனர். பெண்ணுக்கு 17 வயது ஆவதால், ஓராண்டு முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக ரமேஷ் வீட்டார் தெரிவித்தனர்.
திருமணத்தை தள்ளிப்போடவே இவ்வாறு சொல்கின்றனர் என்று நினைத்த காதலியும், அவரது தாய் லதாவும் நேற்று காதலன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். ‘வாசலில் நின்று கத்தாதே. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்து பேசிக்கொள்ளலாம்’ என்று காதலன் கூறினான்.
இருவரும் தொடர்ந்து வாசலில் நின்று கூச்சல் போட்டதால் காதலியுடன் காதலன் சண்டை போட்டான். வாக்குவாதம் கைகலப்பாக மாறி, காதலர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு, முடியைப் பிடித்து சண்டையிட்டனர். கடுமையாக தாக்கிக் கொண்டதில் இருவரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் விலக்கிவிட்டு அவர்களை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
Wednesday, 10 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்க வளமுடன் !
பீர் முகம்மது,
இந்த மாதிரி முக்கியமான நியூஸ் எல்லாம் எங்க ஊரு எடிஷன்ல வர்ரதில்லைங்க, என்ன அநியாயம் பாருங்க.
எனக்கு உங்கள் பெயரில் விவசாயக்கல்லூரியில் ஒரு அபிமான மாணவர் இருந்தார்.
Blogger Dr.P.Kandaswamy said...
பீர் முகம்மது,
இந்த மாதிரி முக்கியமான நியூஸ் எல்லாம் எங்க ஊரு எடிஷன்ல வர்ரதில்லைங்க, என்ன அநியாயம் பாருங்க.
எனக்கு உங்கள் பெயரில் விவசாயக்கல்லூரியில் ஒரு அபிமான மாணவர் இருந்தார்
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு எந்த கல்லூரி சொல்லுங்கள் அது நானா இருக்கலாம்
செம இன்ரஸ்டிங்கா கீது நைனா..
Post a Comment