இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டபுள்யூ.ஆர்.வரதராஜன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அச்செய்தியில், வரதராஜன் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார்; அவரது பிரேத பரிசோதனை அதைத்தான் சொல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியனர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு மக்கல் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால் மக்கள் டிவி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னையில் இருந்து 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் டிவி அலுவகத்திற்குள் நுழைந்து தாக்க முற்பட்டனர்.
போலீசார் தடுத்தும் தடையை மீறி உள்ளே சென்று அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து நொருக்கினர். அலுவகலத்திற்குள் இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். ஒளிபரப்பு சாதனங்களும் சேதமடைந்துள்ளது.
பின்னர் பா.மா.காவினர் பதிலுக்கு தியாகராய நகர் போக் ரோட்டில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகத்தை பா.ம.க.வினர் சிலர் அடித்து நொறுக்கினார்கள்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை நாற்காலி, டைப் ரைட்டர் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
மேலும் அங்கிருந்த கம்யூனிஸ்டு தலைவர் ராமமூர்த்தி போட்டோவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டனர்.
அலுவலகத்தின் மீது சரமாரிமாக கற்களும் வீசப்பட்டன. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டு கட்சி போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பைல்களும் தூக்கி வீசப்பட்டன.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த கம்யூனிஸ்டு நிர்வாகி சம்பத் கூறும்போது, எங்களது அலுவலகத்திற்கு போன் செய்து விட்டுதான் பா.ம.க.வினர் தாக்குதலில் ஈடுபட புறப்பட்டு வந்தனர். அதற்குள் நாங்கள் போலீசுக்கு தகவல் சொன்னோம். 2 போலீசார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.
மக்கள் டி.வி. அலுவலகம் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அலுவலகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Friday, 5 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment