Wednesday, 3 February 2010

இத்தாலியில் பிறந்தவர்களுக்கு மும்பை எப்படி சொந்தமாகும் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இத்தாலியில் பிறந்தவர்களுக்கு மும்பை எப்படி சொந்தமாகும் என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. அன்மையில் இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியா முழுவதும் சொந்தம். அந்த வகையில் இந்தியர்கள் அனைவர்க்கும் மும்பை சொந்தம் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையில் (சாம்னா) தலையங்கத்தில் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் அறிகையில், “மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானதாக இருக்கலாம். ஆனால் அது எப்படி இத்தாலிய அன்னைக்கு (சோனியா) சொந்தமாகும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அவர் மேலும் , அனைவரும் வந்து தங்கிச் செல்ல மும்பை ஒன்றும் ‘தருமசாலை’ அல்ல.

கடந்த 1920இல் சம்யுக்த மராட்டிய இயக்கத்தின் போராட்டத்தில் 105 பேர் கொல்லப்பட்டனர். அன்றே மும்பைக்காக போராடியவர்கள் அவர்கள். இன்று மும்பைத் தாக்குதலின் போது 105 வீரர்கள் கொல்லப்பட்டதால், உடனேயே மும்பை நகரம், ‘தருமசாலை’ ஆக மாறி விடாது என்றும் பால் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

0 comments: